கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 88.13 லட்சம் டோஸ்களை வழங்கி சாதனை படைத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 36,830 பேர் குணமடைந்ததை அடுத்து நாட்டில் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் குணமடையும் விகிதம் தற்போது 97.51%ஆக உள்ளது. மார்ச் 2020 க்குப் பிறகு அதிகபட்ச அளவாகும்.
கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 88.13 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கியுள்ளது. இந்தியாவின் தடுப்பூசி போடும் பணி இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் அடைந்த அதிகபட்ச தடுப்பூசி என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17, 2021) அறிவித்தது. இந்தியாவில் இதுவரை 55 கோடிக்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் 55,47,30,609 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம், 2.25 கோடிக்கும் அதிகமான (2,25,52,523) கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் இருப்பில் உள்ளன என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1,09,32,960 கொரோனா வைரஸ் தடுப்பூசி டொஸ்கள் தற்போது விரைவில் வழங்கப்படும் என சுகாதார அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 36,830 பேர் குணமடைந்ததை அடுத்து நாட்டில் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் குணமடையும் விகிதம் தற்போது 97.51%ஆக உள்ளது. மார்ச் 2020 க்குப் பிறகு அதிகபட்ச அளவாகும்.
நாட்டில் இதுவரை 3,14,48,754 பேர் COVID-19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 25,166 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இது 154 நாட்களில் பதிவான மிகக் குறைந்த ஒரு நாள் தொற்று பாதிப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. நாட்டில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை இப்போது 3,69,846 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த 146 நாட்களில் மிகக் குறைந்த அளவாகும்.