உடலுக்கு வைட்டமின் ஏ மிகவும் முக்கியமான சத்து. இது கண் பார்வையை கூர்மையாக்குவது மட்டுமின்றி, செல்கள் , உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கு உதவுகிறது. வைட்டமின் ஏ ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் ஃப்ரீ ரேடிக்கல்களின் விளைவுகளிலிருந்து உங்கள் செல்களைப் பாதுகாக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் இதயம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை உண்டாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வைட்டமின் ஏ கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் மற்றும் நமது அன்றாட உணவின் முக்கிய பகுதியாகும். வைட்டமின் ஏ கண் பார்வையை கூர்மையாக்குவது மட்டுமின்றி, செல்கள் , உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கு உதவுகிறது. முட்டை மற்றும் கடல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு வைட்டமின் ஏ கிடைக்கிறது. அதே சமயம் இதற்காக சைவ உணவு பிரியர்கள் அச்சப்படத் தேவையில்லை. வைட்டமின் ஏ நிறைந்த பல உணவுகள் உள்ளன.
கேரட்டில் வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின் (Beta Carotene) வடிவத்தில் உள்ளது. இது ஆரோக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும், எனவே கேரட்டை சாப்பிடுவது உங்கள் கண்பார்வையை மேம்படுத்தும். ஒரு நடுத்தர அளவிலான கேரட்டில் 10190 சர்வதேச வைட்டமின் ஏ உள்ளது. இது சராசரி தினசரி தேவையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கலோரிகளில் குறைவாக உள்ளது, ஆனால் இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அவை வைட்டமின் ஏ சத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். இது தினசரி தேவையில் 400% க்கும் அதிகமாகும். இதனை வேக வைத்து சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தக்காளி ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்களின் வளமான ஆதாரங்களில் ஒன்றாகும். ஒரு நடுத்தர அளவிலான தக்காளி உடலின் தினசரி வைட்டமின் ஏ தேவையில் 20 சதவீதத்தை வழங்குகிறது. இது தவிர, தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் நிறைந்துள்ளது.
பாட்டாணியிலும் விட்டமின் ஏ நிறைந்துள்ளது. நீங்கள் 100 கிராம் பட்டாணி சாப்பிட்டால், உடலுக்கு 765 சர்வதேச அளவு வைட்டமின் ஏ கிடைக்கும்.