நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த உணவுகள் உங்கள் மதிய உணவில் கண்டிப்பாக இடம் பெற்றால் கொரோனாவுக்கே சவால் விடலாம்.
வேலை அதிகமாக இருந்தாலும் உணவை சரிவிகித ஊட்டச்சத்துக்களுடன் உண்பதை தவிர்க்கக்கூடாது. இதற்கு எளிய வழி, காய்கள், அரிசி, பருப்பு அனைத்தையும் சேர்த்து சமைக்கும் கிச்சடி. கிச்சடி சமைப்பதும் எளிது, உண்பதும் சுலபம், போதுமான ஊட்டச்சத்தும் கிடைக்கும்
தண்ணீர் உணவின் ஒரு பகுதியாக இருந்தாலும், தண்ணீரைத் தவிர, இளநீர் மற்றும் ஜூஸ்களையும் மதிய உணவுடன் அல்லது உணவு உண்ட சற்று நேரத்திற்கு பின் எடுத்துக் கொள்ளலாம்
தயிர் மற்றும் மோர் உடலின் நீர்ச்சத்தை பராமரிக்கும்.
அலுவலகத்திற்கு உணவு கொண்டு செல்லும்போது வேர்க்கடலை மற்றும் பருப்பு போன்ற ஆரோக்கியமான சில தின்பண்டங்களையும் வைத்திருக்க வேண்டும். இவை உங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது
மதிய உணவில் சரியான அளவு பருப்பு, அரிசி மற்றும் பச்சை காய்கறிகள் இருக்க வேண்டும். மதிய உணவு மிகவும் முக்கியமானது. அதில் சாலட்டும் இருக்க வேண்டும்.