4 கிலோ எடை கொண்ட ‘Bullet Thali’யை சாப்பிட்டு, ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை வீட்டிற்கு ஓட்டிச் செல்லுங்கள். போட்டியில் பங்கேற்க விரும்பும் ஒருவர் 4 கிலோ எடையுள்ள ‘புல்லட் தாலி’ உணவை 60 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.
பல்வேறு உணவு சவால்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வித்தியாசமான உணவு சவால்களின் விளையாட்டில் முன்னணியில் உள்ளது புனேவில் உள்ள ‘ஹோட்டல் சிவ்ராஜ்’. ‘புல்லட் தாலி’ என பெயரிடப்பட்டிருக்கும் ஒரு தட்டு சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தால் ஒரு புதிய ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக் பரிசாக கிடைக்கும்.
பழைய மும்பை-புனே நெடுஞ்சாலையில், Vadgaon Maval அமைந்துள்ள ஹோட்டல் சிவ்ராஜின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த உணவு போட்டியைப் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்தியாவின் மிகப்பெரிய சிறப்பு தாலி அமைப்பு” என்று கூறுகிறது. இந்த உணவில், பல்வேறு விதமான காய்கறிகளால் சமைக்கப்பட்ட சைவ உணவும் உண்டும். அதோடு, மாமிச உணவுவகைகள் கொண்ட அசைவ உணவும் போட்டியில் உண்டு. வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சவால்களை வழங்கும் இந்த ஹோட்டலில் உணவை சாப்பிட்டால், 60 நிமிடங்களில் ராயல் என்ஃபீல்ட் பைக்கை ஓட்டிச் செல்லலாம்.
Also Read | Maruti Cars பம்பர் தள்ளுபடி, ஒவ்வொரு மாடலிலும் மாபெரும் சேமிப்பு
போட்டியில் பங்கேற்க விரும்பும் ஒருவர் 4 கிலோ எடையுள்ள ‘புல்லட் தாலி’ உணவை 60 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். (Photo Source: Instagram/Hotel Shivraj)
புல்லட் தாலி என்பது அசைவ உணவு கொண்டது. இறால் பிரியாணி, மீன் வறுவல், சிக்கன் சுக்கா, பல்வேறு விதமான மட்டன், மற்றும் வகைவகையான உணவுகள் உள்ளன. (Photo Source: Instagram/Hotel Shivraj)
ஹோட்டல் சிவ்ராஜின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புல்லட் உணவின் விலை ரூ .2500 என குறிப்பிடப்பட்டுள்ளது. (Photo Source: Instagram/Hotel Shivraj)
‘புல்லட் தாலி’ சவாலில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ .1.65 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக் வழங்கப்படும். (Photo Source: Instagram/Hotel Shivraj)
உணவு பிரியர்களுக்கு இந்த ஹோட்டல் மிகவும் பிடித்தமானது, ஏன் சொர்க்கம் என்றே சொல்லலாம். சமீபத்தில், உணவகம் 8 கிலோ ராவன் தாலியை அறிமுகப்படுத்தியது, அந்த உணவுத்தட்டின் விலை 5000 ரூபாய். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். அதோடு, உணவுக்கான 5000 ரூபாயையும் கொடுக்க வேண்டாம். Special Khasdar Thali, Sarkar Mutton Thali and Special Paandav Thali உட்பட பல விதவிதமான உணவுகளை சுவராசியமான வகையில் வழங்குகிறது ஹோட்டல் சிவ்ராஜ். (Photo Source: Instagram/Hotel Shivraj)