இனி Facebook Users அனைவருக்கும் கொட்டும் பண மழை: FB மூலம் இனி easy income கிடைக்கும்

பேஸ்புக் இப்போது வரை ஒரு பொழுதுபோக்கு சமூக ஊடகமாகவே படுத்தப்படுகிறது. ஆனால் இப்போது பயனர்கள் இந்த சமூக ஊடக செயலி மூலம் பணமும் ஈட்டலாம்.

பயனர்களின் கருத்துகளுக்கு ஈடாக பணம் ஈட்ட வழிவகை செய்யப்படும் என சமீபத்தில் பேஸ்புக் கூறியது. பேஸ்புக்கிலிருந்து எவ்வாறு சம்பாதிப்பது என்பதை இங்கே காணலாம். 

1 /5

சமூக ஊடக நிறுவனமான Facebook தனது வலைப்பதிவு மூலம், இனி பயனர்கள் இந்த தளம் மூலம் பணம் ஈட்ட முடியும் என வியாழக்கிழமை அறிவித்துள்ளது. தொழிநுட்ப நிறுவனமான Facebook இனி பயனர்களுக்கு அவர்களது போஸ்ட்களுக்கு பணமும் கொடுக்கும்.

2 /5

பயனர்கள் பதிவேற்றிய குறுகிய வீடியோக்களுக்கு இனி பணம் வழங்கப்படும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.  

3 /5

நிறுவனம் இப்போது பயனர்களால் பதிவேற்றப்பட்ட குறுகிய வீடியோக்களில் விளம்பரங்களை சேர்க்கும். விளம்பரத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை நிறுவனம் வைத்துக்கொள்ளும். மற்றொரு பகுதி வீடியோ உருவாக்கியவருக்கு வழங்கப்படும்.

4 /5

தகவல்களின்படி, 3 அல்லது அதற்கு மேற்பட்ட நிமிடங்கள் கொண்ட வீடியோக்கள் மூலம் பேஸ்புக்கில் பணம் ஈட்டலாம். இந்த வீடியோக்களில் நிறுவனம் 30-45 விநாடிகள் விளம்பரத்தை சேர்க்கும்.

5 /5

இந்த செயல்முறையின் சோதனை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது. சோதனை வெற்றிகரமாக நடந்தபின்னர், இது அனைத்து பயனர்களுக்கும் பயன்படுத்தப்படும்.