பொருட்கள் அடிக்கடி கீழே விழுகிறதா? எச்சரிக்கை! வாஸ்து தோஷமா?

புதுடெல்லி: வாஸ்து சாஸ்திரத்தில் சில விஷயங்கள் சுபமாகவும், சில அசுபமாகவும் கருதப்படுகின்றன. அதுபோலவே, அறிகுறிகள் மூலம் எதிர்காலத்தில் நடக்கும் நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில பொருட்கள் கீழே விழுவது மங்கலகரமானாது என்றும், சில அடிக்கடி கை தவறுவது துரதிருஷ்டத்திற்கான அறிகுறி என்று நம்பப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா  உறுதிப்படுத்தவில்லை.)

1 /5

உணவு அன்னபூரணி அன்னை உணவின் தெய்வம். எனவே, மீண்டும் மீண்டும் உங்கள் கைகளில் இருந்து உணவு விழுந்தால், அன்னபூரணியை வணங்கவும். வீட்டில் உணவை வீணாக்க வேண்டாம்.

2 /5

உப்பு மீண்டும் மீண்டும் உப்பு கீழே கொட்டுவதால், பண இழப்பு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளையும் குறிக்கிறது.

3 /5

மிளகு சமையலறையில் வேலை செய்யும் போது பொருட்கள் விழுவது சகஜம், ஆனால் சில பொருட்கள் உங்கள் கைகளில் இருந்து மீண்டும் மீண்டும் விழுந்தால், எச்சரிக்கையாக இருங்கள். கருப்பு மிளகு மீண்டும் மீண்டும் தரையில் விழுவது நல்லதல்ல. இது திருமண வாழ்வில் பிரச்சனைகள் வருவதற்கான அறிகுறியாகும்.

4 /5

எண்ணெய் சமையலறையில் அடிக்கடி எண்ணெய் கொட்டுவது சனீஸ்வரரின் அதிருப்தியின் அறிகுறியாகும். சனியின் அதிருப்தி குடும்பத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே அடிக்கடி எண்ணெய் கைதவறினால் சனீஸ்வரரை வணங்கவும்.  

5 /5

பால் ஜோதிடம் அல்லது வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் பால் கொட்டுவது அசுபமானது. பால் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. வீட்டில் பால் மீண்டும் மீண்டும் கொட்டினால், அது வீட்டில் எதிர்மறை சக்தியின் அறிகுறியாக கருதப்படும்.