உலகக் கோப்பை எனக்கு அழைப்பு இல்லை... இந்திய அணியின் சாம்பியன் கேப்டன் கருத்து!

IND vs AUS Final 2023: நடப்பு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தனக்கு அழைப்புவிடுக்கவில்லை என இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

  • Nov 19, 2023, 17:19 PM IST
1 /7

நடப்பு உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.   

2 /7

டாஸிற்கு பின் 1.35 மணி முதல் தேசிய கீதம் பாடி முடிக்கும் வரை இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு விமான சாகசத்தை நிகழ்த்தியது.  

3 /7

இப்போட்டிக்கு இதுவரை உலகக் கோப்பையை வென்ற அனைத்து அணியின் கேப்டன்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

4 /7

ஆனால், கபில் தேவ் தனக்கு அழைப்புவிடுக்கவில்லை என கூறியுள்ளார். அதாவது கபில் தேவ் ஏன் போட்டிக்கு செல்லவில்லை என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் அத்தகைய பதிலை அளித்துள்ளார். 

5 /7

X தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றில் செய்தியாளரிடம் ஹிந்தியில் உரையாடும் கபில் தேவ்,"நான் அங்கு அழைக்கப்படவில்லை. அதாவது அவர்கள் என்னை அழைக்கவில்லை. அதனால் நான் செல்லவில்லை. அவ்வளவுதான் எளிமையான விஷயம். 1983 உலகக் கோப்பையை வென்ற மொத்த அணியுமே இந்த தருணத்தில் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் இது ஒரு பெரிய நிகழ்வு என்பதாலும், மக்கள் பொறுப்புகளைக் கையாள்வதில் மும்முரமாக இருப்பதாலும், சில சமயங்களில் மறந்துவிடுவார்கள். அப்படிதான் நான் நினைக்கிறேன்" என்றார்.

6 /7

பிரதமர் மோடி போட்டியை காண வருவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் இதுவரை வருகை தரவில்லை. முன்னாள் கேப்டன் தோனி உள்ளிட்டோருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.  

7 /7

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் தற்போது பலப்பரீட்சை நடந்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. கில், ரோஹித், ஷ்ரேயாஸ், விராட், ஜடேஜா என 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் (36 ஓவர்கள்) எடுத்தனர்.