தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்

கேரட்டுகள் கண்ணைக் கவரும் நிறத்தைக் கொண்டதோடு, இனிப்புச் சுவையுடன் இருக்கும். கேரட்டை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், கண்களில் எவ்வித பிரச்சனைகளும் வராமல், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

ஊட்டச்சத்து நிபுணரின் கருத்துப்படி கேரட்டில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் பொட்டாசியம், வைட்டமின் A, C, பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதை தவிர கேரட் பல நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது. கேரட் சாப்பிடுவதால் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம்.

1 /6

உடல் எடை குறையும்: கேரட்டில் காணப்படும் பீட்டா கரோட்டின் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகின்றன. இதனால் அடிக்கடி ஏற்படும் பசி உணர்வும் குறையும். உடல் பருமனை குறைக்க விரும்புபவர்கள் கேரட்டை தங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

2 /6

குடலுக்கு நல்லது: கேரட்டில் உள்ள அதிக நார்ச்சத்து, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் சிறந்த குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. கேரட்டில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளது, இது நன்மை பயக்கும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும். இதனால் மலச்சிக்கல் போன்ற நிலை ஏற்படாமல் தடுக்கலாம். 

3 /6

நோய் எதிர்ப்பு சக்தி: அதிக வைட்டமின் ஏ, ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை நம் உடலில் உறுதி செய்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல் கட்டுப்பாட்டை உறுதி செய்வது மட்டுமல்லாமல், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. இதனால், எந்த விதமான நோய்களும் உடலில் அவ்வளவு எளிதாக அண்டாது. 

4 /6

சர்க்கரை நோயாளி: கேரட்டில் இருக்கும் கார்போஹைட்ரேட் உடலில் உள்ள இரத்த சர்க்கரை சமமாக வைத்திருக்க உதவும். எனவே, கேரட்டை சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.   

5 /6

சரும பொலிவு: கேரட்டை உட்கொள்வதால் முகம் பொலிவு பெற்று சருமம் ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில், வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்திருப்பதால் சருமம் இளமையுடன் இருக்க உதவுகிறது.

6 /6

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.