நேருக்கு நேர் வரும் சூரியன் சனி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், வெற்றிகள் குவியும்

Samsaptak Yogam, Impact on Zodiac Signs: வேத சாஸ்திரங்களின்படி, சூரியன் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சனி பகவான் நீதியின் கடவுள் என போற்றப்படுகிறார். 

 

இருவருக்கும் இடையே தந்தை-மகன் உறவு உள்ளது. இருந்தபோதிலும், இருவருக்கும் இடையில் பெரிதாக விரோத உணர்வே இருப்பதாக கருதப்படுகின்றது. இந்த நேரத்தில் சூரியன் அதன் சொந்த ராசியான சிம்மத்திலும், சனி பகவான் அதன் சொந்த ராசியான கும்பத்திலும் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இரு கிரகங்களும் ஒன்றிலிருந்து ஒன்று 7ம் வீட்டில் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இப்படி அவர்கள் நேருக்கு நேர் இருப்பதனால் சமசப்தக யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருக்கும், இந்த நிலை சில ராசிகளுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் சிலருக்கு இதி மிக நல்ல பலன்களை அள்ளித் தரும். அந்த அதிர்ஷடக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

சூரியன்: சூரியன் கிரகங்களின் அரசனாக கருதப்படுகிறார். தற்போது அவர் தனது சொந்த ராசியான சிம்மத்தில் உள்ளார்.  

2 /8

சனி பகவான்: சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். தற்போது அவர் தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார்.

3 /8

சமசப்தக யோகம்: தற்போது சூரியனும் சனியும் ஒன்றிலிருந்து ஒன்று 7ம் வீட்டில் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இப்படி அவர்கள் நேருக்கு நேர் இருப்பதனால் சமசப்தக யோகம் உருவாகிறது. 

4 /8

ராசிகளில் தாக்கம்: சமசப்தக யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருக்கும், இந்த நிலை சில ராசிகளுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் சிலருக்கு இதி மிக நல்ல பலன்களை அள்ளித் தரும். அந்த அதிர்ஷடக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

5 /8

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் சமசப்தக யோகத்தால் நல்ல பலன்கள் உருவாகி அதிகபட்ச பலனைப் பெறப் போகிறார்கள். இந்த காலத்தில் ​​பணிபுரிபவர்கள் பணியிடத்தில் புதிய பொறுப்பைப் பெறலாம். அவர்களுக்கு  பதவி உயர்வுடன் சேர்த்து ஊதிய உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அவர்களது பணிகளும் இப்போது முடிவடையும். 

6 /8

கடகம்: இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். மூதாதையர் சொத்துக்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய தொழில் தொடங்க நல்ல நேரமாக இது இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். பழைய நண்பர்களை சந்திக்கலாம்.

7 /8

மேஷம்: இந்த ராசிக்காரர்கள் சமசப்தக யோகம் காரணமாக தங்கள் தொழிலில் பலனடையப் போகிறார்கள். அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கலாம். முதலீடு செய்ய இது ஒரு சிறந்த நேரம். மனைவியுடன் உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தலவல்களை உறுதிப்படுத்தவில்லை.