சனியின் ராசியில் சூரியன்: இந்த ராசிகளுக்கு நம்ப முடியாத நற்பலன்கள்... கோடீஸ்வர யோகம்

Sun Transit: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. கிரகங்களின் அரசனாக உள்ள சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். 

 

பிப்ரவரி 13 அன்று சூரியன் சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனியின் ராசியில் சூரியனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இது அதிகப்படியான நன்மைகளை அள்ளித் தரும். இவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மழை பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /10

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. 

2 /10

சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். சூரியன் பெயர்ச்சி சங்கராந்தி என அழைக்கப்படுகின்றது. இந்த மாதம் 13 ஆம் தேதி சூரியன் தனது ராசியை மாற்றவுள்ளார்.

3 /10

சூரியன் பெயர்ச்சி ஆகி சனியின் ராசியான கும்ப ராசிக்குள் நுழைவார். இந்த நேரத்தில், சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமன நிலையில் இருப்பார். சூரியன் எந்த ராசியில் வலுவான நிலையில் இருந்தாலும், அந்த நபர்கள் வாழ்வில் மகிழ்ச்சி, பணியிடம், வணிகத்தில் வெற்றி என பல வித நற்பலன்களை அனுபவிப்பார்கள். 

4 /10

சனியின் ராசியில் சூரியனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் பல வித தாக்கங்களை ஏற்படுத்து. எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு பல நல்ல செய்திகள் கிடைக்கும். இவர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் இப்போது நடந்து முடியும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலான். 

5 /10

மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனும் சனியும் ஒரே ராசியில் இணைவது அதிர்ஷ்டமாக அமையப் போகிறது. இந்த காலகட்டத்தில், இவர்களது அனைத்து முயற்சிகளிலும் பெரிய அளவிலான வெற்றி கிடைக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குழந்தைகளால் நல்ல செய்தி வரும், அவர்களது முழுமையான ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.   

6 /10

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சியும் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையும் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சொத்து மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல லாபம் ஈட்டலாம். உறவுகள் சுமுகமாக இருக்கும். 

7 /10

கும்ப ராசியில் சூரியனும் சனியும் இணைவதால், மிதுன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி, லாபம், முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள், உடல் ஆரோக்கியம் என அனைத்து செல்வங்களும் கிடைக்கும். இந்த காலத்தில் அனைத்து காரியங்களிகும் வெற்றி மேல் வெற்றி குவியும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் லாபகரமானதாக இருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். 

8 /10

சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையால் கன்னி ராசிக்காரர்களுக்கு வர்த்தகத்தில் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு முன்பை விட வலுவாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.   

9 /10

தனுசு ராசிக்காரர்களுக்கும் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும். இந்த நேரத்தில், உங்கள் தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும். நிதி நிலை நன்றாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும். 

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.