QR குறியீட்டைப் பயன்படுத்தி WhatsApp Chat History -ஐ புதிய ஆண்ட்ராய்டு தொலைபேசிக்கு மாற்றலாம்.
நீங்கள் வாட்ஸ்அப் history-களை புதிய தொலைபேசிக்கு டிரான்ஸ்பர் செய்கிறீர்கள் என்றால் இரண்டு மொபைலும் ஆண்ட்ராய்டு ஆக இருக்க வேண்டும்.
மேலும், இரண்டு ஃபோன்களும் ஒரே வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். அதன்பிறகு கீழே இருக்கும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்
உங்கள் பழைய போனில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
Navigate to More Options > Settings > Chats > Transfer chats > Start என்பதை செய்யுங்கள்
உங்கள் புதிய மொபைலில் வாட்ஸ்அப்பை நிறுவி, அதே தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்.
பழைய தொலைபேசியிலிருந்து வாட்ஸ்அப் சாட் history-ஐ மாற்ற "Start" என்பதைத் கிளிக் செய்யவும்.
தேவையான அனுமதிகளை வழங்கவும். பின்னர், QR குறியீடு காட்டப்படும்.
QR குறியீட்டை ஸ்கேன் செய்ய உங்கள் பழைய சாதனத்தைப் பயன்படுத்தவும்.
தொலைபேசிகளை இணைப்பதற்கான அனுமதி கிடைத்ததும், டிரான்ஸ்பர் செயல்முறை தொடங்கும்.
Chat History டிரான்ஸ்பர் ஆனதும், "Done" என்பதைத் கிளிக் செய்யவும்