சலார் பட பட்ஜெட்டே 400 கோடி நா சம்பளம் எவ்வளவு இருக்கும்? இதோ விவரம்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள சலார் படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதை தொடர்ந்து, அப்படத்தில் நடித்துள்ளவர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

 

பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ்,  தற்போது கே.ஜி.எஃப் படங்கள் மூலம் இந்தியளவில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் Part 1 – Ceasefire திரைப்படத்தில் நடித்துள்ளார். Salaar Part 1: Ceasefire இந்தியத் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். இந்த படத்தின் அறிவிப்பு முதல் தற்போது வரை எதிர்பார்ப்பு குறையாமல் உள்ளது. இந்த படத்தில் பிரபாஸூடன் ஸ்ருதி ஹாசன், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சலார் படத்தில் தற்போது நடித்துள்ளவர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை இங்கே காண்போம்.

1 /6

பிரபாஸ்: ஒரு படத்துக்கு ரூ. 150 கோடி சம்பளம் பெறும் பிரபாஸ், தற்போது சலார் படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக 100 கோடி ரூபாய் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.   

2 /6

பிருத்விராஜ் சுகுமாரன்: வித்தியாசமான பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், தற்போது இந்த திரைப்படத்தில் நடிக்க 4 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கியிருக்கிறாராம்.  

3 /6

ஸ்ருதி ஹாசன்: பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில் ஆத்யாவாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவருக்கு இந்த படத்தில் சம்பளமாக் 8 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   

4 /6

ஜெகபதி பாபு: இந்தியத் திரையுலகில் நன்கு அறியப்பட்ட முகமான ஜெகபதி பாபு, சலார் படத்தில் நடிப்பதற்கு 4 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இது பிருத்விராஜ் சுகுமாரனின் சம்பளத்துடன் ஒப்பிடத்தக்கது.  

5 /6

பிரசாந்த் நீல்: கேஜிஎஃப் திரைப்படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரசாந்த் நீல். தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கியுள்ளார், தற்போது இயக்கி வரும் பிரபாஸின் சலார் படத்திற்காக 50 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.  

6 /6

பட ரிலீஸ் எப்போது: சலார் திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் திரைக்கு வரவுள்ளது.