வெந்தயத்தை எப்படி சாப்பிட வேண்டும்? தெரியுமா உங்களுக்கு?

எடை இழப்புக்கு வெந்தய விதைகளை எப்படி சாப்பிடுவது என்று யோசிக்கிறீர்களா? அதன் நன்மைகளைப் பெறவும் கூடுதல் கிலோவைக் குறைக்கவும் உங்கள் தினசரி உணவில் எப்படி சாப்பிடுவது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

உடல் எடை குறைப்பில் பெரும் பங்கு வகிக்கும் மசாலா சமையல் பொருளாக வெந்தயம் உள்ளது. உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமல்லமால் உடலின் எடையை குறைக்கவும் உதவுகிறது. வெந்தயத்தில் ரிபோபிளாவின், செம்பு, பொட்டாசியம், போலிக் அமில், லியோனிக் அமிலம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, வைட்டமின் ஏ, பி6, சி, கே சத்துக்கள் இடம்பிடித்திருக்கின்றன. இவற்றுடன் நார்ச்சத்துக்கள், அமினோ அமிலங்கள் ஏராளமாக நிரம்பியுள்ளன.

வெந்தயத்தை எப்படியெல்லாம் எடுத்துக்கொண்டால் உடல் எடை குறையும் என்பது பற்றி பார்க்கலாம்.

1 /5

ஊற வைத்த வெந்தய விதை: வெந்தய விதைகளை ஒரு டிஸ்பூன் அளிவில் எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். தொடர்ந்து இதை செய்வதன் மூலம் உடல் எடையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை உணரலாம்.

2 /5

வெந்தய டீ: வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து டீயாக பருகலாம். வெந்தயத்தை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள இது ஒரு இனிமையான மற்றும் பயனுள்ள வழியாகும்.

3 /5

முளைகட்டி வெந்தயத்தை சாப்பிடலாம்: வெந்தயத்தையும் முளைகட்ட வைத்து பயன்படுத்துவதன் மூலம் அதிலிலுள்ள ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை அதிகரிக்க செய்யலாம்.

4 /5

வெந்தயத்தை பொடியாக அரைத்து சாப்பிடலாம்: வெந்தயத்தை நன்கு அரைத்து பொடியாக்க சூப்க்ள், ஸ்மூத்திகளில் பயன்படுத்தலாம். இந்த தனித்துவமான முறை உங்கள் அன்றாட உணவுகளில் பல வகைகளில் வெந்தயத்தை பயன்படுத்த ஊக்கப்படுத்துகிறது.

5 /5

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.