Teeth Whitening Tips : நம்மில் பலருக்கு, பற்கள் பற்கள் மஞ்சள் படிந்ததாக இருக்கும். அதை நீக்க, ஒரு சில இயற்கை டிப்ஸ் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Teeth Whitening Tips : நாம் உடுத்தும் மிகப்பெரிய ஆபரணங்களில் மிகவும் மதிக்கத்தக்கதான, பவர்ஃபுலான ஆபரணமாக இருப்பது, நம் சிரிப்புதான். சிரிப்புதான், நமக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை கொடுக்கும். ஆனால், ஒரு சிலர் தங்களின் சிரிப்பை தைரியத்துடன் வெளிப்படுத்த மஞ்சள் பற்கள் தடையாக இருக்கலாம். இதை சரிசெய்ய, சில இயற்கை வழிகள் இருக்கின்றன. உங்கள் பற்களை பளிச்சென்று வெந்நிறமாக மாற்ற, இந்த டிப்ஸ்களை உபயோகித்து பாருங்கள்.
மஞ்சள் பற்களை வெள்ளையாக்க, இயற்கயான டிப்ஸ் இருக்கிறது. அதை இங்கு பார்ப்போம்.
பேக்கிங் சோடா: பற்களை இயற்கையாக வெள்ளையாக்க, பேக்கிங் சோடா உதவுவதாக கூறப்படுகிறது. பற்களில் நிரந்தரமாக தேங்கியிருக்கும் மஞ்சள் கரையை அகற்ற, இது உதவுமாம். வாரத்தில் இரு முறை, இதை வைத்து பல் தேய்க்கலாம் என சிலர் பரிந்துரைக்கின்றனர்.
ஆயில் புல்லிங்: ஆயில் புல்லிங் முறையை பல ஆண்டுகளாக மக்கள் உபயோகித்து வருகின்றானர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு சில ஆராய்ச்சி கட்டுரைகளில் இது பற்களை வென்மையாக்க உபயோகிப்பதாக கூறப்பட்டிருக்கிறது. தேங்காய் எண்ணெயை வாயில் போட்டு 5 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம்.
காய்கறி மற்றும் பழங்கள்: சாப்பிடுவதற்கு கருக்கு முருக்கு என இருக்கும் காய்கறிகளை சாப்பிடலாம். இதனால் ஈறுகளும் வலுவாகும்.
ஆப்பிள் சைடர் வினீகர்: ஆப்பிள் சைடர் வினீகர், பல்வேறு உடல் நலக்கோளாறுகளை சரி செய்ய உதவும். ஆனால், ஈறுகளை பாதிப்படைய வைக்காமல் உபயோகிக்க வேண்டும்.
ஆரஞ்சு தோல்: ஆரஞ்சு தோல்களை வைத்து பற்களை சுத்தம் செய்யலாம். தினமும் 2 முதல் 3 நிமிடங்களுக்கு இதை வைத்து பல் துலக்கினால் கண்டிப்பாக பற்களை வெள்ளையாக்கலாம் என கூறப்படுகிறது. இதை செய்த பிறகு கண்டிப்பாக வாய் கொப்பளிக்க வேண்டும்.
நாக்கை சுத்தம் செய்தல்: பற்கள் வென்மை ஆகாமல் இருப்பதற்கு நாக்கு சுத்தமில்லாமல் இருப்பதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. எனவே, பற்கள் வெள்ளையாக Tongue Cleaner-ஐ வைத்து சுத்தம் செய்யலாம். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)