How To Handle Toxic Work Environment : அலுவலகத்தில், டாக்ஸிக் ஆன ஆட்களிடம் இருந்தும், பணிச்சுமையில் இருந்தும் தப்பிப்படு எப்படி?
How To Handle Toxic Work Environment : புனேவை சேர்ந்த ஒரு பெண் Chartered Accountant (பட்டய கணக்காளர்) ஒருவர், தனது டாக்ஸிக் ஆன அலுவலகத்தாலும், பணியாலும் உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது, 26தான். EY என்ற நிறுவனத்தில் வேலை பார்த்த அவர், பணிச்சுமை மற்றும் பதற்றம் காரணமாக உயிரிழந்திருப்பதாக அவரது தாயார் கூறியிருக்கிறார். இவர் மட்டுமல்ல, நம்மில் பலரும் இப்படி டாக்ஸிக் ஆன அலுவலக சூழலிலும், மேலாளர்களிடமும் மாட்டிக்கொண்டு எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் சுற்றிக்கொண்டிருப்போம். இதிலிருந்து தப்பிப்பது எப்படி? இங்கு பார்ப்போம்.
நிலையை மதிப்பிடுதல்: முதலில், உங்கள் அலுவலகத்தில் பிறர் செய்யும் செயல்கள் உங்களை தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் பாதிக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி தெரிந்து கொண்டால், உங்களால் பிரச்சனை என்ன என்பதை ஓரளவிற்கு கண்டுபிடிக்க முடியும்.
எல்லை கோடை நிர்ணயித்தல்: அலுவலகத்தில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட நாம் பிறரிடத்திலும், பிறர் நம்மிடத்திலும் ஒரு எல்லையுடன் இருக்க வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் setting boundary என்ற அழகான இரண்டு வார்த்தைகள் இருக்கிறது. அலுவலகத்தில், உங்களிடம் பேசுபவர்களிடம் மட்டும் பேசுங்கள். நீங்களாக போய் எந்த கிசுகிசுவிலும் தலையிடாதீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
ஆவணப்படுத்துவது: உங்களை தனிப்பட்ட முறையில் பாதித்த விஷயங்களை எப்போதும் ஆவணப்படுத்துவதால் அது ஒரு நல்ல ஆதாரமாக விளங்கும். இவை உங்களுக்கு எதிர்காலத்தில் உதவலாம்.
ஆதரவு தேடுதல்: உங்களது நம்பிக்கைக்குறிய நபரிடம் மனம் திறந்து பேசலாம். அப்போது, உங்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பற்றி கூறலாம்.
பணிமாற்றம்: உங்கள் அலுவலகத்தில் பிரச்சனை இல்லை, ஆனால் உங்கள் மேலாளர் டாக்ஸிக் ஆக இருக்கிறார் என்றால் உங்கள் நிறுவனத்திலேயே வேறு டீமில் காலியிடம் இருந்தால், அங்கு பணியிட மாற்றம் கேட்கலாம்.
சுய விவரக்குறிப்பு: உங்களது ரெஸ்யூமை அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். பிற வேலை பார்க்கும் இடங்களில் இருப்பவர்களிடமும் தொடர்பு வைத்திருத்தல் நல்லது.
சுய பாதுகாப்பு: வேலையை தாண்டி, உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய பழக வேண்டும். தியானம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதால் கண்டிப்பாக மன அழுத்தம் தீரலாம்.
வெளியேறுதல் குறித்த திட்டம்: வேறு வழியே இல்லை, இந்த இடத்தில் இருந்து போய்தான் ஆக வேண்டும் என்று தோன்றினால் கண்டிப்பாக அதற்கான திட்டமிடுதலில் தீவிரமாக இறங்க வேண்டும். வேலை தேடுவது, நிதி ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொள்வது ஆகியவற்றை பார்த்து கையாள வேண்டும்.