Tips To Get Out Of A Toxic Relationship : நம்மில் பலர் டாக்ஸிக் ஆன நபருடன் உறவில் ஏதேனும் ஒருமுறையாவது சிக்கியிருப்போம். அந்த நபரிடம் இருந்து, எப்படி பிரிவது? இதோ டிப்ஸ்!
Tips To Get Out Of A Toxic Relationship : ஒரு நபருடன் பழகும் போது, ஆரம்பத்தில் அவர் ஒரு மாதிரி இருப்பார். ஆனால், போகப்போக அவரது சுய உருவம் பொறுமையாகத்தான் தெரிய வரும். இது போன்ற நபர் உங்களின் நண்பராக இருக்கலாம், காதலராக இருக்கலாம், கணவராக, குடும்பத்தில் ஒருவராக கூட இருக்கலாம். இவர்களிடம் இருந்து எப்படி விலகுவது? இதோ சில ஈசியான டிப்ஸ்!
முதலில், அந்த நபர் டாக்ஸிக்காக இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவர் உங்களிடமும் பிறரிடமும் மரியாதையாக பேசுகிறாரா, உணர்வு ரீதியாக அல்லது உடல் ரீதியாக உங்களை துன்புருத்துகிறாரா என்பதை பாருங்கள்.
அவரது செயல்கள் உங்களை எப்படி பாதிக்கிறது என்பதை அவரிடம் முன்கூட்டியே எடுத்து சொல்லுங்கள். அவர் உங்களிடம் எல்லை மீறும் போதெல்லாம், அதை சுட்டிக்காட்டுங்கள்.
உங்களது நம்பிக்கைக்குரிய நண்பர்கள், அல்லது குடும்பத்தினருக்கு உங்களது நிலை குறித்து தெரிவியுங்கள். அந்த நபர், உங்களது நிலையை புரிந்து கொள்ளும் நபராக இருக்க வேண்டும்.
இந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்து எப்படி விலக போகிறீர்கள் என்பதை தேர்ந்தெடுங்கள். உங்கள் நிதி மேலாண்மை, சட்ட ரீதியான பிரிதல் ஏதேனும் இருந்தால் அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் நலனில் நீங்கள் ஆழ்ந்த அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் உடலை நன்றாக பார்த்துக்கொள்வதும், மனதை நன்றாக பார்த்துக்கொள்வதும் உங்கள் கைகளில் இருக்கிறது. எனவே, உடலை கை விட்டு விடாதீர்கள்.
நீங்கள் இந்த உறவில் இருந்து விலக நினைக்கும் போது, உங்கள் பார்ட்னரிடம் இது குறித்து தெளிவாக பேசுங்கள். தேவையற்ற குழப்பங்களை எதிர்காலத்தில் தவிர்க்க இது உதவும்.
டாக்ஸிக் உறவில் இருந்து பிரிந்தவுடன் அவரிடம் இருந்து மொத்தமாக உங்கள் தொடர்பை துண்டித்து விடுங்கள். அப்படி அவருடன் தொடர்பில் இருந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், உங்களது தனிப்பட்ட வாழ்க்கை அவருக்கு தெரியாதது போல பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் இருந்த உறவு குறித்து, அதிலிருந்து பிரிந்தவுடன் நன்கு ஆராயுங்கள். இது, உங்களை நீங்களே நன்றாக புரிந்து கொள்ள உதவும். இது, உங்களை வாழ்வில் முன்னேற ஊக்குவிக்கும்.