Lifestyle Tips: மாதவிடாய் காலத்தில் உடலுறவு மேற்கொள்கிறீர்கள் என்றால் தம்பதியர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கு காணலாம்.
மாதவிடாய் காலத்தில் உடலுறவு மேற்கொள்ளலாமா வேண்டாமா என்ற தயக்கமும், சந்தேகமும் பலரிடமும் இருக்கும். மாதவிடாய் காலத்தில் உடலுறவு மேற்கொள்ள எவ்வித தயக்கமும் காட்ட தேவையில்லை. இந்த 7 விஷயங்களை பின்பற்றினாலே போதுமானது.
மாதவிடாய் காலத்தில் உடலுறவு மேற்கொள்ள முதலில் இருவருக்கும் இதில் சம்மதமும் ஈடுபாடும் இருக்க வேண்டும். கட்டயாப்படுத்தக் கூடாது. தயக்கம் இருந்தால் அதுகுறித்து உரையாடி இருவருக்கும் ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
Latex காண்டம்களை பயன்படுத்துங்கள். இதனால், கரு உருவாவது தடுக்கப்படுவது மட்டுமின்றி பிற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள், சிறுநீர் பாதை தொற்று உள்ளிட்ட பிற நோய்களும் தடுக்கப்படும்.
அதேபோல், உடலுறவு மேற்கொள்ளும்போது வெள்ளை நிற அல்லது லைட் நிற படுக்கைகளையும், விரிப்புகளையும் தவிர்க்கவும். அடர்ந்த நிறத்தில் விரிப்புகளை பயன்படுத்தும்போது ரத்தக் கசிவு இருந்தாலும் அவர் உங்களுக்கு அச்சமளிக்காது. மேலும் எளிதாகவும் சுத்தம் செய்ய இயலும்.
ஈரமில்லாத டவல்கள், எவ்வித நறுமணமும் இல்லாத வெட் வைப்ஸ் ஆகியவற்றை எடுக்கும் வகையில் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது நீங்கள் சுத்தம் செய்துகொள்ளலாம்.
ஷவரில் நனைந்துகொண்டு உடலுறவு மேற்கொள்வதும் நல்ல ஆப்ஷன்தான். இதனால் எளிதாக நீங்களும் சுத்தப்படுத்திக்கொள்ளலாம். இருந்தாலும் இதில் அதிக கவனமும் தேவை. இது முடியாது எனில், உடலுறவு மேற்கொள்ளும் முன் இருவரும் குளித்துவிடுவது உங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
உடலுறவு மேற்கொள்ளும் போஸிஷன்களிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் ஆண்கள் மேல் அமர்ந்து உடலுறவு மேற்கொள்ளும் நிலையை தவிர்த்துவிடுங்கள். இதனால் ரத்தக் கசிவு ஏற்படலாம்.
உடலுறவு மேற்கொள்ளும் முன் மாதவிடாய் பேட்கள் மற்றும் கப்களை அகற்றிவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. ரத்தத்தால் பரவும் நோயோ அல்லது பிற பிரச்னையோ இருந்தால் மகப்பேறு மருத்துவரை சந்தித்து தக்க மருத்துவ ஆலோசனை மேற்கொண்டு, அதற்கேற்ப உடலுறவு மேற்கொள்ளவும். இவற்றை Zee News உறுதிப்படுத்தவில்லை.