கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் கடன் பெற சில டிப்ஸ்!

வங்கிகளில் கடன் பெற விரும்புவர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் முக்கியம், கிரெடிட் ஸ்கோர் 900 இருந்தால் உங்களுக்கு உடனே கடன் கிடைக்கும் அதுவே 650-க்கு கீழ் இருந்தால் கடன் பெறுவது கடினம்.

 

1 /4

கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பவர்கள் கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையிலுள்ள இணை-விண்ணப்பதாரரின் உதவியோடு கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.  

2 /4

கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பவர்கள் வங்கியில் குறைவான அளவு தனிநபர் கடனை கேட்கலாம், குறைவான தொகை என்பதால் கடன் வழங்குபவர் உங்களுக்கு கடன் வழங்க வாய்ப்புண்டு.  

3 /4

நீங்கள் வாங்குகின்ற கடன் தொகையை திருப்பி செலுத்திவிட ஏதுவாக உங்களிடம் நிலையான வேலையோ அல்லது நிலையான வருமானமோ இருப்பதை கடன் வழங்குபவரிடன் தெளிவாக கூற வேண்டும்.  

4 /4

நிதி சிக்கல் காரணமாக நீங்கள் மோசமான கிரெடிட் ஸ்கோர் வைத்திருந்தால், அதுகுறித்து நீங்கள் உங்கள் வங்கி அதிகரிடம் கலந்துரையாடலாம்.  சில சமயங்களில் உங்கள் சிபில் அறிக்கையில் ஏதேனும் தவறுகள் இருக்கக்கூடும், அதனால் அதனை தினமும் சரிபார்த்து தவறுகளை சரிசெய்துகொள்ள வேண்டும்.