துன்பம் வரும்போதெல்லாம் மகிழ்ச்சியோடு எதிர்கொள்வது எப்படி?

துன்பங்கள் இல்லாத வாழ்க்கை இல்லை என்பதால் அதனை சந்திக்கும்போதெல்லாம் சிரித்துக் கொண்டே எதிர்கொள்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம். 

 

வாழ்க்கையில் தடைகள் வரும்போதெல்லாம் துன்பமும் நம்மை சூழும் என்பதால், அதனை வெற்றிகரமாக கடந்து செல்லும்போது தான், வாழ்க்கையின் வெற்றியே கிடைக்கும். வெற்றி பெற்றவர்கள் எல்லாம் இதனை செய்திருக்கிறார்கள் என்பதால், நீங்களும் அதனை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

 

1 /11

வாழ்க்கையில் வரும் தடைகள் எல்லாமே உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச் செல்லக்கூடியவை தான். நீங்கள் அதனை எதிர்கொள்ள பயப்படாமல், சவாலாக எதிர்கொண்டாலே அந்த தடைக்கு பிறகு இருக்கும் வாழ்க்கையின் சுவாரஸ்யம் அற்புதமானவையாக இருக்கும். 

2 /11

துன்பங்கள் எல்லாமே நம்முடைய கடுமையான உழைப்பை வேண்டுபவை. அந்த இடத்தில் சோர்ந்து போகாமல், பயப்படாமல் இருந்து, அந்த நிலையை வெற்றிகரமாக கடந்து செல்ல அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். ஒதுங்கிக் கொள்வதால் அந்த தடையை சிறிது காலத்துக்கு தள்ளி வைக்க முடியுமே தவிர, அதனை கடக்காமல் நீங்கள் வேறு வழியில் செல்ல முடியாது.

3 /11

ஒருவேளை அந்த தடையை கடக்க வேறு வழியை தேர்வு செய்தால், இந்த இடத்துக்கு நீங்கள் வர எடுத்துக் கொண்ட முயற்சியை நீங்கள் அந்த புது வழிக்கு முதலில் இருந்து தொடங்க வேண்டும். அதற்கு பதிலாக இப்போது இருக்கும் இடத்தில் எதிர்கொண்டிருக்கும் துன்பத்தை படிப்படியாக விலக்க முயற்சி செய்வது சாலச்சிறந்தது. 

4 /11

அந்த ஆற்றல் உங்களுக்குள்ளேயே தான் இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களுக்கு அந்த தடையை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த மனப்பக்குவத்தை பெற ஆன்மீகம், யோகா என பயிற்சிகள் எடுத்துக் கொள்ளலாம். 

5 /11

ஏன் இந்த தடை, துன்பம் வந்திருக்கிறது? என்ற கேள்வியை எழுப்புங்கள். அப்போது அந்த தடை வந்திருக்கும் வழியும், அதனை எதிர்கொள்வதற்கான வழியும் கிடைக்கும். இந்த கேள்விகளுக்கு பின்னால் தான் செல்லக்கூடிய பாதைக்கான வழியும் இருக்கும்.

6 /11

சில நேரங்களில் துன்பத்தை விதியே என்று கடக்க வேண்டிகூட வரலாம். அப்போது துவண்டுவிடாமல் அப்பிரச்சனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். காலம் உங்களுக்கு மருந்தாக அமையும். ஓரீரு நாட்களில் எல்லாம் மாறிவிடாது, மறைந்தும் விடாது. எந்தவொரு செயலுக்கும் தீர்வு கிடைக்க சில காலம் எடுத்துக் கொள்ளும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

7 /11

பிரச்சனைகளுக்கான வேரை அறிந்து அதனை தீர்க்க உங்கள் ஆற்றலை செலவழித்தால் பிரச்சனையும் தீரும். உங்கள் நேரமும், ஆற்றலும் மிச்சமாகும். அத்துடன் நிம்மதியும், மகிழ்ச்சியும் சேர்ந்தே போனஸாக கிடைக்கும்.

8 /11

எக்காரணத்தைக் கொண்டும் குறுக்கு வழிகளையும், தவறான அணுகுமுறையும் கையாண்டுவிடாதீர்கள். அது உங்களுக்கு வாழ்நாள் பிரச்சனையாக வந்துவிடக்கூட வாய்ப்பு இருக்கிறது. பொறுமை, நிதானம், அமைதி ஆகியவற்றை எந்த பிரச்சனைகள் வரும்போது கடைபிடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

9 /11

எதிர்மறை எண்ணங்களுக்கு உங்களை ஒப்புவித்தால், நிம்மதியற்ற வாழ்க்கைக்குள் சிக்கிக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தான் உங்களை நல்வழிப்படுத்தும். சமூகத்தில் எப்போதும் எல்லோருடனும் இணைந்திருப்பீர்கள். 

10 /11

நம்பிக்கை, தைரியம் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். கும்பல் மனப்பான்மையில் இருந்து விலகி, உங்களின் சுய சிந்தனையில் எல்லா முடிவுகளையும் எடுக்க பழகிக் கொள்ளுங்கள். அதுவே உங்களின் வாழ்க்கையில் எதார்த்தமான முடிவுகளைக் கொடுக்கும். யாரும் கடைசி வரை உங்களுடன் இருக்கமாட்டார்கள் என்பதை திடமாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

11 /11

நேர்மையான வழியில் செல்லும்போது, யார் வேண்டுமானாலும் உங்களுக்கு உதவியாக வருவதற்கு தயாராக இருப்பார்கள். எதிர்மறை வழியில் செல்லும்போது பாதியில் எல்லாம் கைவிட்டுவிடுவார்கள். சூழலுக்கு ஏற்ப நகர்ந்து கொள்வார்கள். அதனால் கோபம், விரக்தி, தாழ்வு மனப்பான்மை, பயம் எல்லாம் தொற்றிக் கொள்ளும். இது வேண்டாம். மகிழ்ச்சியாக இருக்க நேர்மறை எண்ணத்துடன் எப்போதும் இருக்க உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.