ஆதார் அட்டையை பயன்படுத்தி வங்கி இருப்பை சரிபார்ப்பது மட்டுமின்றி பணம் அனுப்புவது, அரசின் மானியம் பெறுவது மற்றும் பான் கார்டு பதிவு செய்வது என பல வேலைகளை செய்து கொள்ளலாம்.
முதலில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட உங்கள் மொபைல் நம்பரிலிருந்து *99*99*1# என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும்.
இப்போது நீங்கள் உங்கள் ஆதார் அட்டையிலுள்ள 12 இலக்க எண்களை உள்ளிட வேண்டும்.
வெரிஃபை செய்வதற்காக மீண்டும் உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
இப்போது உங்களுக்கு UIDAI-லிருந்து ஒரு எஸ்எம்எஸ் அனுப்பப்படும், அதில் உங்களது வங்கி இருப்பு காண்பிக்கப்படும்.