How To Say Sorry After A Fight : ஒருவரிடம் சண்டை போட்ட பின்பு, அவரிடம் மன்னிப்பு கேட்பது என்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கலாம். இதற்கு ஈசியான டிப்ஸ் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
How To Say Sorry After A Fight : ஒரு உறவில் சண்டை வருவதும், அதன் பிறகு சாரி சொல்லி சமாதானம் ஆகிக்கொள்வதும் சகஜம். ஆனால், ஒரு சிலருக்கு சண்டைக்கு பிறகு, சண்டையிட்ட அந்த நபரிடம் அந்த சண்டையே நடக்காதது போல நடந்து கொண்டு அப்படியே சகஜமாக பழகுவர். இதற்கு எதிரில் இருக்கும் நபரால் எப்படி ரியாக்ட் செய்வது என்றும் தெரியாமல் இருக்கும். இதற்கு காரணம், அந்த நபர் தன் ஈகோவை உடைக்க கூடாது என்று நினைத்தோ, அல்லது மன்னிப்பு கேட்க பயந்தோ கூட இப்படி செய்யலாம். இப்படி யோசிப்பவர்கள், ஒருவரிடம் எப்படி சாரி கேட்க வேண்டும் தெரியுமா? அதற்கான சில டிப்ஸ் இதோ!
நண்பர்கள், குடும்பம், சகோதரிகள், கணவன் மனைவி, காதலர்கள் இப்படி எத்தனையோ உறவுகளுக்குள் சண்டை வருவது என்பது மிகவும் சகஜம்தான். ஆனால், அந்த சண்டைக்கு பிறகு எப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் தெரியுமா? இதோ அதற்கென்று சில டிப்ஸ்!
உணர்ச்சிகள்: சண்டைக்கு பிறகு உங்களுக்கு கோபமோ, சோகமோ எதுவாக இருந்தாலும் அதனை முழுமையாக உணர வேண்டும். இந்த சண்டையில் தவறு உங்களுடையதுதான் என தெரிந்தாலும் கூட, அவர்களை தொடர்பு கொள்வதற்கு முன்பு கொஞ்சம் யோசிக்கவும்.
சண்டையில், நீங்கள் என்ன பேசினீர்கள், நீங்கள் பேசிய ஏதேனும் எதிரில் இருக்கும் நபரை பாதித்ததா என்பதை யோசிக்க வேண்டும். அப்படி ஏதேனும் இருந்தால் கண்டிப்பாக உங்கள் மீது தவறு இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். எ
உங்களை போலவே எதிரில் இருக்கும் நபரும் சண்டையை தீர்க்க நினைத்தால், மன்னிப்பு கேட்க நினைத்தால் கண்டிப்பாக அவரது உணர்ச்சிகளுக்கு நீங்கள் மதிப்பு கொடுக்க வேண்டும்.
முடிந்த வரை, முகத்திற்கு நேராக மன்னிப்பு கேட்பது சிறந்தது. அப்படி அந்த நபர் உங்களை நேரில் சந்திக்க மறுத்தால் மெசஜ் அனுப்புவதை விட்டுவிட்டு, கைப்பட எழுதிய உண்மை கடிதத்தை அனுப்பலாம்.
சண்டை முடிந்து, மன்னிப்பு கேட்கும் போதே உங்கள் மீது என்ன தப்பு இருக்கிறது என்பதையும் கூறி, அவரது தவறு உங்களை எந்த வகையில் பாதித்தது என்பதையும் எடுத்துக்கூற வேண்டும். ஆனால், ஒன்று சேர்ந்த பிறகு அதை குத்திக்காட்ட கூடாது.
தவறு செய்த பின்பு, அதை பொருளாலோ அல்லது எங்கேனும் வெளியில் அழைத்து செல்வதாலோ மன்னிப்பு கிடைக்காது. அதனால், அதற்கு பதிலாக உங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ளவும்
இனி இது போன்ற சண்டை வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பேச வேண்டும். இதனால், வருங்காலத்தில் அந்த சண்டை வருவதை தவிர்க்கலாம்.