உங்களது வங்கி சேமிப்புக் கணக்குகளில் எவ்வளவு பணம் வைத்து இருக்கலாம்?

வங்கி சேமிப்பு கணக்குகளில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்து கொள்ள முடியும். அதே சமயம் ஒரே நேரத்தில் அதிக பணத்தை டெபாசிட் செய்ய முடியாது.

 

1 /5

வங்கி கணக்கு என்பது முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கூட வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு வருகிறது.  வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்திற்கு வட்டியும் தருகிறது.  

2 /5

டிஜிட்டல் யுகத்தில் பணத்தை எளிதாக அனுப்ப வங்கிகள் இன்றியமையாதவை. ஆனால் வங்கி சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வைத்து இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

3 /5

வங்கி சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு எந்த வித வரம்பும் இல்லை. ஆனால் உங்கள் சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.    

4 /5

குறிப்பிட்ட பணத்தை தவிர அளவுக்கு அதிகமான பணத்தை வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்தால் வருமான வரித்துறை நோடீஸ் உங்களுக்கு வரலாம்.  ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான ரொக்க டெபாசிட் செய்ய முடியாது.  

5 /5

அப்படி செய்தால் மத்திய நேரடி வரிகள் வாரியம் உங்களுக்கு விளக்கும் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம். அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.