எடையை அதிகரிக்கும் ஹார்மோன் பிரச்சனை: அறிகுறிகள், தீர்வுகள் இதோ

Weight Loss Tips: எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. அதிகரிக்கும் எடையை குறைப்பது அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறோம். 

 

பலருக்கு தொப்பை விழுதல் மிகப்பெரிய பிரச்சனை ஆகி வருகிறது. ஒரு முறை தொப்பை வர துவங்கிவிட்டால், அதை குறைப்பது மிகப் பெரிய பணியாகி விடுகிறது. தொப்பையில் சேரும் கொழுப்பை குறைப்பது மிக கடினமான விஷயமாக உள்ளது. எவ்வளவு விரைவாக தொப்பை வந்துவிடுகிறதோ, அதை குறைப்பது அதே அளவு கடினமாக இருக்கிறது. நம்மில் பலர் உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால், அனைத்து முயற்சிகளை எடுத்த பின்னரும் எடை குறையவில்லை என்றால் அதற்கு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக இருக்கலாம். 

1 /8

சில சமயங்களில் பல வித முயற்சிகளை எடுத்த பின்னரும் உடல் எடை குறையாமல் இருப்பதை நாம் கவனித்துள்ளோம். இதற்கு உடலில் உள்ள ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு (Hormonal Imbalance) காரணமாக இருக்கலாம்.   

2 /8

இந்த பிரச்சனை பெண்களிடம் காணப்படுகிறது. இது முக்கியமாக உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு பாதிக்கப்படுவதால் நிகழ்கிறது. உடலில் இந்த ஹார்மோனின் அளவு அதிகரிப்பதால், இன்னும் பல ஹார்மோன்களின் சமநிலையும் பாதிக்கப்படுகின்றது.

3 /8

உடல் எடை குறையாமல் இருப்பதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் காரணம் என்பதை எப்படி தெரிந்துகொள்வது? ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிப்பதால் உடலில் பல அறிகுறிகளும் தோன்ற ஆரம்பிக்கும். இந்த ஹார்மோன் உங்கள் எடை இழப்பு பயணத்தை பல வழிகளில் பாதிக்கலாம்.   

4 /8

உடல் எடை குறையாமல் இருப்பதற்கு காரணம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு என்றால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவது எப்படி? உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிப்பதற்கான அறிகுறிகளையும், எடை இழப்புக்கான ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க சில எளிய வழிகள் உள்ளன. 

5 /8

மாதவிடாய் காலத்தில் கடுமையான மற்றும் வலிமிகுந்த இரத்தப்போக்கு, அடிக்கடி மாறும் மனநிலை, எப்போதும் சோர்வாக உணர்வது, வாயுத்தொல்லை அல்லது உப்பச பிரச்சனை ஆகிய அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். எடை இழப்புக்கு ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் வழிகளை காணலாம்.   

6 /8

மாதவிடாய் சுழற்சியின் முடிவில் இருந்து அண்டவிடுப்பு வரை (1 முதல் 14 நாட்கள் வரை) தினமும் 1 தேக்கரண்டி ஆளிவிதை மற்றும் பூசணி விதைகளை சாப்பிடுங்கள். அண்டவிடுப்பிற்கு பின் வரும் 15-28 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 1 தேக்கரண்டி எள் மற்றும் சூரியகாந்தி விதைகளை சாப்பிடுங்கள்.

7 /8

தினமும் காலை அல்லது மாலை 10-15 நிமிடங்கள் சூரிய ஒளியில் அமர முயற்சி செய்யுங்கள். மேலும், ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிடுங்கள். இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்தும்.

8 /8

கேரட் சாப்பிடுவது அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை பிணைக்க அல்லது கட்டுப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, இது உடலில் இருந்து அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை அகற்ற உதவுகிறது.