2022ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாண்டுக்காக மக்கள் பல திட்டங்களை வகுத்துள்ளனர், அதே சமயம் சில எதிர்பார்ப்புகளையும் வைத்துள்ளனர். 2021-ம் ஆண்டு திருமணம் செய்ய முடியாதவர்கள், தங்கள் வாழ்க்கையில் துணையை தேடி ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2022ல் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையில் அமர்ந்திருக்கும் இந்த 5 ராசிக்காரர்களின் திருமண ஆசை நிறைவேறப் போகிறது. சனி மற்றும் குருவின் அருளால் இவர்களுக்கு திருமணம் கைகூடும்.
கடக ராசிக்காரர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு 2022 ஆம் ஆண்டு சிறப்பானதாக இருக்கும். இவர்களுக்கு வாழ்க்கைத்துணை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மூன்று முடிச்சுப் போடலாம். அதைவிட சந்தோஷம் என்னவெனில், அவர்களுக்கு மனதிற்கு பிடித்தமான வாழ்க்கைத் துணை கிடைப்பதுதான்.
2022ல் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் துணையின் பிரவேசம் நிச்சயம். இவர்கள் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு திருமணம் நிச்சயம் கை கூடும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை துணை தேடல் இந்த ஆண்டு முடிவடையும். மனதிற்கு பிடித்தவர்கள் திருமணம் செய்ய நேரம் கை கூடும்.
2022-ம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொருத்தமான துணை கிடைத்து வாழ்க்கை பயணம் இனிமையாக தொடங்கும்.
ஏப்ரலில் நடக்கவிருக்கும் வியாழன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதனால், திருமணம் நிச்சயம் கை கூடும். இத்துடன் குருவின் அருளால் திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)