குறைந்த ரத்த அழுத்தத்தை போக்க உடனடி வீட்டு மருத்துவம்

குறைத்த ரத்த அழுத்தத்தைபோக்க வீட்டு மருத்துவ முறைகளை தெரிந்து கொள்வோம்

 

1 /5

 திடீரென்று உங்கள் BP குறைந்தால், எதாவதொரு இனிப்புப் பொருளையும் உடனடியாக உட்கொள்ளலாம். ஆனால், நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை தேவை

2 /5

யாருக்கு வேண்டுமானாலும் குறைந்த ரத்த அழுத்தம் இருக்கலாம். அதனை நீங்கள் உறுதி செய்து கொண்டால், இரத்த அழுத்தத்தை சீராக்க நீங்கள் உப்பு உட்கொள்ளலாம். உங்களுக்கு குறைந்த பிபி பிரச்சனை இருந்தால், ஒரு கிளாஸ் தண்ணீரில் உப்பு மற்றும் ஒரு சிட்டிகை சர்க்கரை கலந்து குடிக்கவும். இது உங்களுக்கு உடனடி நிவாரணம் தரும்.

3 /5

குறைந்த பிபி உள்ள உலர் திராட்சை சாப்பிடுங்கள். இது உங்களுக்கு உடனடி நிவாரணம் தரும். உலர்ந்த திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். குறைந்த இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் இதை செய்தால் சில நாட்களில் பலன் தெரியும்.

4 /5

இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதற்குக் காரணம் நீண்ட நேரம் பசியாக இருப்பதும்தான். நீங்கள் 5-6 மணி நேரத்திற்கும் மேலாக பசியுடன் இருந்தால், குறைந்த பிபி பிரச்சனையின் ஆபத்து அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சாப்பிடுவதில் அதிக இடைவெளி எடுக்கக்கூடாது. 

5 /5

இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் போது துளசி இலைகளை உட்கொள்ளலாம். குறைந்த இரத்த அழுத்தம் உள்ள நோயாளிக்கு 4-5 துளசி இலைகளை மெல்ல கொடுக்கவும். இது உங்கள் பிபியை சாதாரணமாக்கும்.