இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும், திபெத்தின் மலைபபங்கான நிலத்தையும் பிரிக்கும் மலைத்தொடர் இமயமலை. விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைக்கிறதோ என்று தோன்றும் வண்ணம் நீண்டு நெடியதாய் உயர்ந்து நிற்கும் மாமலை இமயமலை.
புதுடெல்லி: உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய, மிகவும் உயர்ந்தது இமயமலைத் தொடர். எவரெஸ்ட் உட்பட உலகின் சில மிக உயர்ந்த சிகரங்கள் இமயமலைத்தொடரில் அமைந்துள்ளன. உறைபனியால் மூடப்பட்டு, வெண்பனி மலையாய் காட்சியளிக்கும் இமயமலை இந்தியாவின் வட எல்லை. வடஎல்லையில் சீனா, பாகிஸ்தான் என இரு அண்டை நாடுகளும் தொல்லை கொடுத்தாலும் எதையும் தாங்கும் இதயங்களுடன், தன்னுயிரை துச்சமாய் மதித்து நாட்டைக் காக்கும் ராணுவவீரர்களில் கணிசமான வீரர்கள் இமயமலையில் பணிபுரிகின்றனர்.
வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அங்கும் இங்குமாய் பல இடங்களுக்கு சுற்றுலாவுக்கு திட்டமிடும் அனைவரின் முதல் தேர்வாக இருப்பதும் இந்த இமயமலையே. இந்த ஆண்டு புத்தாண்டில் யாரும் வெளியே செல்ல திட்டமிட முடியாதவாறு ஏற்கனவே திட்டமிட்டு விட்டது கொரோனா. கொரோனா என்ற கொடுங்கோலனின் திட்டத்தை முறியடித்து நேரடியாக இமயமலை சுற்றுலா செல்வதற்கு காலம் கனியட்டும். புகைப்படங்களின் வாயிலாக இமயமலை சுற்றுலா செல்வோமா?
Photo Courtesy: ANI and Wikipedia
பஞ்சசூலி (Panchachuli) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் 6904 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இந்து மதத்தில், சிவபெருமானின் மாமனாராக இமயமலை உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அன்னை பார்வதியின் தந்தையான இமாவான் என இமயமலை குறிப்பிடப்படுகிறது. கைலாயம், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி, அமர்நாத், வைஷ்ணவதேவி அன்னை ஆலயம் என பல இந்து புனிதத் தலங்கள் இமயமலைய்ல் அமைந்துள்ளன.
தலாய்லாமாவின் இருப்பிடம் மற்றும் திபெத்திய புத்த இடங்கள் இமய மலையில் உள்ளன. திபெத்தில் 6,000 புத்த மடங்கள் இருந்தன. திபெத்திய முஸ்லிம்களின் பல மசூதிகள் லாசா மற்றும் ஷிகட்சே ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
இமயமலையில் உள்ள பல இடங்கள் இந்து, சமண, சீக்கிய மற்றும் புத்த மதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை.
மூன்று இணையான உப தொடர்களைக் கொண்டுள்ள இமயமலைத்தொடர், இந்தியா, நேபாளம், சீனா, பூடான், பாகிஸ்தான் என ஐந்து நாடுகளில் பரவியுள்ளது.
உலகம் முழுவதும் இருந்து மலையேற்ற வீரர்கள் வர விரும்பும் மலை இமயமலை
இந்திய-சீன எல்லையில் அமைந்துள்ள பாங்காங்-த்சோ ஏரி, மத்திய திபெத்தில் யம்ட்ரோக் த்சோ ஏரி என பல மிகப்பெரிய ஏரிகள் இமயமலையில் அமைந்துள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில், உலக காலநிலை மாற்றத்தின் விளைவாக இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துவருவது கவலைகளை ஏற்படுத்துகிறது.
சிந்து, கங்கை, பிரமபுத்திரா போன்ற பெரிய நதிகள் இமயமலையில் உற்பத்தியாகின்றன. இமயமலையில் உருவாகும் நதிகளின் மொத்த வடிகால் பகுதிகளில் 60 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
இமயமலையின் தோற்றம் வானில் இருந்து. வானுக்கும் மண்ணுக்கும் இடையில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்