கடந்த சில ஆண்டுகளாகவே பெட்ரோல் மற்றும் டிசல் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் சமீபகாலமாக சிஎன்ஜி கார்கள் அதிகம் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், சிஎன்ஜி கார்களில் லிட்டருக்கு 30 கி.மீ. வரை மைலேஜ் கொடுக்கும் 8 கார்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
ரூ.10 லட்சத்திற்கும் குறைவாவும், அதேநேரத்தில் லீட்டருக்கு 30 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும் காரிகளை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
Maruti Dzire CNG: இந்த மாடல் கார் 33.73 கிமீ/கிலோ வரை மைலேஜ் வழங்குகிறது. எக்ஸ் ஷோரூமில் ஆரம்ப விலையாக ரூ.8.74 லட்சமாக உள்ளது.
Maruti Swift CNG: இந்த மாடல் கார் 32.85 கிமீ/ கிலோ மைலேஜ் வரை வழங்குகிறது. எக்ஸ் ஷோரூமில் ஆரம்ப விலையாக ரூ.8.20 லட்சமாக உள்ளது.
Maruti Wagon R CNG: எக்ஸ். ஷோரூமில் ரூ.6.89 லட்சத்திலிருந்து தொடங்கும் இந்த கார் 33.48 கிமி/கிலோ மைலேஜ் வரை வழங்குகிறது.
Maruti Alto K10 CNG: இந்த மாடல் கார் எக்ஸ் ஷோரூமில் ரூ.5.96 லட்சத்தில் இருந்து விலை தொடங்குகிறது. மேலும், 33.85 கிமீ/கிலோ வரை மைலேஜ் வழங்குகிறது.
Maruti Celerio CNG: இந்த கார் 34.43 கிமீ/கிலோ மைலேஜ் கொடுக்கும் நிலையில், எக்ஸ் ஷோரூமில் ரூ.6.74 லட்சத்தில் இருந்து விலை தொடங்குகிறது.
Maruti S-Presso CNG: இந்த கார் ரூ. 5.92 லட்சத்தில்(ex-showroom) இருந்து விலை தொடங்கும் நிலையில், 32.73 கிமீ/கிலோ மைலேஜ் வரை வழங்குகிறது.
Toyota Glanza & Maruti Baleno CNG: இந்த கார்கள் இரண்டும் 30.61 கிமீ/கிலோ மைலேஜ் வரை வழங்குகிறது. Maruti Baleno-வின் விலை ரூ.8.40 லட்சத்திலிருந்தும், Toyota Glanza-வின் விலை ரூ.8.65 லட்சத்தில் இருந்து(ex-showroom) தொடங்குகிறது.