Lemon Chutney For Cure: மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கு யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரித்திருப்பதே காரணமாக இருக்கலாம். மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற சுலபமான வழி உணவு...
பியூரின் என்பது உடலில் காணப்படும் ஒரு இயற்கையான பொருள் ஆகும். நமது உடலின் கழிவுப் பொருட்களில் ஒன்றான யூரிக் அமிலம், வேதிப்பொருளான பியூரின் முறிவு காரணமாக உருவாகிறது. யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த, உணவில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
எலுமிச்சம்பழத்துக்கு ஒரு மகத்துவம் உண்டு. இது நேர்மறையான ஆற்றலை கொடுத்து, எதிர்மறையான ஆற்றலை விரட்டும் என்று சொல்வார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், எலுமிச்சை பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. பொதுவாக எலுமிச்சையின் தோலை பயன்படுத்தாமல் வீணடித்துவிடுவார்கள். எலுமிச்சை ரசத்தில் இருக்கும் நோய் தீர்க்கும் பண்புகளைப் போலவே, அதன் தோலும் மருத்துவ குணங்கள் வாய்ந்தது, யூரிக் அமிலத்தைக் குறைக்கவும் எலுமிச்சைத் தோல் பயன்படும்
உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால், உடலில் உள்ள இரத்தம் மாசுபட்டு போகிறது. இது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்
எலும்புகள் மற்றும் மூட்டுக்களில் படியும் யூரிக் அமிலம், மூட்டு வலி, எலும்பு முறிவு, கீல்வாதம் என பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். உணவு மூலம் யூரிம் அமில சுரப்பைக் கட்டுப்படுத்தலாம்
யூரிக் அமில அளவை பெருமளவு குறைக்க, எலுமிச்சம்பழத் தோல் நல்ல மருந்தாக பயன்படும். மருந்தே உணவாகாமல் இருக்க, உணவையே மருந்தாக மாற்றினால் எப்படி இருக்கும்? எலுமிச்சை தோல்களிலிருந்து தயாரிக்கப்படும் சுவையான சட்னியை ருசித்தும் சாப்பிடலாம், நோயையும் குணப்படுத்தலாம்
ஐந்து எலுமிச்சை தோல்கள், சீரகம் - 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன், சர்க்கரை - 1 உப்பு தேவையான அளவு, எண்ணெய் - 1 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். வெந்நீரில் எலுமிச்சம்பழத் தோலை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து, பிறகு தண்ணீரை வடித்து எடுக்கவும். இதனால் தோலின் கசப்பு நீங்கிவிடும். பிறகு, ஆறிய எலுமிச்சம்பழத்தோலும், சீரகம், மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். எண்ணெயை சூட்டாக்கி அதில் கடுகு கறிவேப்பிலை தாளித்து சட்னியை சேர்க்கவும். யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் சுவையான சட்னி தயார்.
எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது யூரிக் அமில அளவைக் குறைக்கும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளின் களஞ்சியமாகவும் உள்ளது
பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை