Detox Drinks: உடலில் இருக்கும் நச்சுகளை நசுக்கித்தள்ளும் இயற்கை பானங்கள்! காலையில் குடிங்க

Detox Drinks To Flush Out Toxins: உடலில் இருக்கும் நச்சுகளை நீக்க சில இயற்கை பானங்களை குடிக்கலாம். அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம்.

Detox Drinks To Flush Out Toxins: உடலில் அதிகமான நச்சுகள் இருப்பதால், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம். நம் தினசரி வாழ்வு முறைகளினாலும், உணவு பழக்கங்களினாலும், நம்மை சுற்றி இருக்கும் மாசடைந்த காற்றாலும் உடலில் நச்சு பரவலாம். இதை சரிசெய்ய, நாம் ஹெல்தியான சில பானங்களை குடிக்க வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?

1 /8

சூடான எலுமிச்சை தண்ணீர்: உடல் நச்சுகளை நீக்கி செரிமானத்தை மேம்படுத்த ஒரு பயனுள்ள வழி ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து அருந்துவதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். எலுமிச்சை உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்குகிறது. மேலும், சாப்பிட்ட உணவுகள் விரைவில் செரிமானம் ஆவதற்கும் உதவுகிறது. 

2 /8

மஞ்சள் மற்றும் இஞ்சி தேநீர்: மஞ்சள் மற்றும் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. வெந்நீரில் மஞ்சள் மற்றும் இஞ்சி சேர்த்து தேநீர் சாப்பிடும் போது நம் மனதுக்கும்  உடலுக்கும் நன்மை கிடைக்கும். இனிப்புக்காக ஒரு துளி தேன் கூட இதில் சேர்த்துக்கொள்ளலாம். 

3 /8

ஸ்மூதி: மாட்சா பவுடரை வைத்து தயாரிக்கப்படும் பானம் இது. இதில் கீரை, வாழைப்பழம், பாதாம் பால் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உடலில் வைட்டமின் சத்துகள் தங்குவதோடு, தேவையற்று தங்கியிருக்கும் பாக்டீரியாக்களையும் நீக்கலாம். 

4 /8

எலுமிச்சையுடன் கிரீன் டீ: கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. இது நம்மை சுற்றி இருக்கும் காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள உதவும். அது மட்டுமன்றி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைட்டமின் சி சத்தையும் உடலில் தங்க வைக்கும்.

5 /8

வெள்ளரிக்காய் மற்றும் புதினா ஊறவைத்த தண்ணீர்: டாக்ஸின்ஸை அகற்றும் மற்றொரு காலை பானம் வெள்ளரி மற்றும் புதினா கலந்த தண்ணீர் ஆகும். வெள்ளரிக்காய் உடல் நீர்ச்சத்துடன் இருப்பதை உறுதி படுத்துகிறது.  புதினா புத்துணர்ச்சியூட்டும் சுவையை சேர்க்கிறது. 

6 /8

சியா விதை நீர்: இதை தயார் செய்ய, சியா விதைகளை தண்ணீரில் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில், எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். சியா விதைகள் நார்ச்சத்து நிறைந்தவை மட்டுமன்றி, செரிமானத்திற்கும் உதவுகிறது. 

7 /8

ஆங்கிலத்தில் இதனை ABC ஜூஸ் என்று கூறுவர். ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட்டை வைத்து செய்யப்படும் பானத்திற்குதான் இந்த பெயர். இது, உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றுவது மட்டுமன்றி, முகத்திற்கும் பொலிவு தரும். 

8 /8

கற்றாழை சாறு: கற்றாழை சாற்றினை அருந்துவதால், உடலில் அழற்சி எதிர்ப்பு தன்மை உருவாகிறது. சாதாரண நீரில், ஒரு ஸ்பூன் கற்றாழை சாறை கலந்து, சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து இதனை குடிக்கலாம்.  (பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)