Health Tips In Tamil: முகத்தில் காணப்படும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து இங்கு காணலாம்.
இவை உடல் எடை குறைப்பிலும் பெரும் பங்காற்றும்.
- புரதம் உள்ளிட்ட அனைத்து ஊட்டச்சத்துகளும் சார்ந்த உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- தண்ணீர் மற்றும் நீர் ஆகாரங்களை குடிப்பது மிக முக்கியமாகும்.
- அதேபோல் ஃபைபர் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
- முகக் கொழுப்பை மட்டும் குறைக்க நல்ல தரமான கொழுப்புள்ள பன்னீர் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
- சர்க்கரை, உப்பு, மைதா ஆகியவற்றை அதிகமாக சேர்க்கக் கூடாது.
- மதுபானங்கள் மற்றும் கார்ப்போனேடட் குடிபானங்கள் முகக் கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் தவிர்த்துக்கொள்ளவும்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை தவிர்க்கவும். அதில் சோடியம் அதிகமாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News பொறுப்பேற்காது.