குக்கரில் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லதா... கெட்டதா... முழு விவரம் இதோ!

தற்போதைய நவீன காலகட்டத்தில் குக்கரில் சமைப்பதுதான் பலரின் வசதியாகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் அமைகிறது. இருப்பினும், குக்கரில் சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா இல்லையா என்பது பலருக்கு சந்தேகமாக உள்ளது. எனவே, சந்தேகத்திற்கான தீர்வை இதில் காணலாம். 

 

 

 

 

 

 

1 /7

பிரஷர் குக்கரில் உணவை வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதே. காரணம், குக்கர் நன்றாக மூடியிருக்கும் என்பதால் நீர் ஆவியாகாமல் இருக்கும். இதனால், அந்த உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிலேயே இருக்கும்.   

2 /7

மேலும் பிரஷர் குக்கரில் சமைப்பதால் அதில் எண்ணெய் ஊற்றி சமைக்க தேவையில்லை. உணவில் எண்ணெய்யை சேர்ப்பது என்பது சில ஆரோக்கிய சீர்கேடை ஏற்படுத்தலாம். எனவே, எண்ணெய் இல்லாமல் சாப்பிடுவதும் உடலுக்கு நல்லதுதான்.

3 /7

குறிப்பாக, வேறு பேன்களிலும், நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதை விட குக்கரில் சமைப்பது நல்லதுதான் என கூறப்படுகிறது.   

4 /7

சோறை வெறும் பாத்திரத்தில் உலை வைத்து சாப்பிடலாமா அல்லது குக்கரில் வேக வைத்து சாப்பிடலாமா என்பதும் பலருக்கும் சந்தேகம் உள்ளது.   

5 /7

உலை வைத்து சாப்பிடுவது நல்ல முறை என்றாலும், குக்கரில் வைப்பதால் கேடு ஏதும் கிடையாது. குக்கரில் வைப்பதால் அரிசியில் இருக்கும் சத்துக்கள் அப்படியே இருக்கும்.   

6 /7

குக்கரில் சமைப்பதால் உங்களின் நேரம் மிச்சமாகும். மேலும், அதனை எளிமையாகவும் கழுவிக்கொள்ளலாம். சூப்களில் இருந்து கிரேவி, குழம்பு என பல வகை உணவுகளை நீங்கள் இதில் சமைக்கலாம்.   

7 /7

குக்கரில் சமைக்கும்போது மிகவும் கவனமுடன் இருப்பதும் அவசியம். குக்கர் விசில் தொடங்கி அனைத்தையும் அனைத்தையும் நீங்கள் சரியாக வைத்திருக்க வேண்டும். மேலும், குக்கர் உணவுகளை சாப்பிடுவது குறித்து நீங்கள் உங்கள் ஊட்டச்சத்து நிபுணரை கூட அணுகலாம்.