Side Effects Of Maida: மைதா என்பது சமீப காலத்தில் நமது உணவு பழக்கத்தில் அதிகம் பயன்படுத்தும் உணவுப்பொருளாகிவிட்டது. அந்த வகையில் மைதாவை அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்து இதில் காணலாம்.
Side Effects Of Maida: புரோட்டா மட்டுமில்லை பூரி, வடை, தோசை என வீட்டு பலகாரங்கள் கூட தற்போது மைதாவின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. எனவே, இது புரோட்ட பிரியர்களுக்கு மட்டுமின்றி உணவு விஷயத்தில் அலட்சியமாக இருப்போருக்குமான தகவல் என்பதை நினைவிக்கொள்ளவும்.
மைதாவில் வைட்டமிண்கள், தாதுக்கள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள் குறைவு என்பதால் அதனை தொடர்ந்து சாப்பிடுவதால் ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படும்.
மைதாவை தொடர்ந்து சாப்பிடுவதால் இயற்கையாக உடலில் இன்சுலின் சுரப்பது குறைந்து ரத்தத்தில் சர்க்கரை அளவு எக்குத்தப்பாக எகிறும்.
மைதாவில் சர்க்கரை சார்ந்த பல பொருள்களும் கலந்துள்ளதால் இது பற்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மைதாவை அதிக சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். இதன்மூலம், இதய நோய் வருவதற்கான அபாயம் அதிகமாகும்.
நார்ச்சத்து அளவு குறைவாக இருப்பதால் மைதா உங்களின் செரிமான அமைப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
குறைவான நார்ச்சத்து, அதிக கலோரிகள் உள்ளதால் மைதாவை அதிக உட்கொள்வதால் உங்களின் உடல் எடையும் அதிகரிக்கும்.
மைதாவை அதிகம் உட்கொள்வதால் உடலில் நாள்பட்ட நோய் வருவதற்கான அபாயம் அதிகமாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.