Benefits Of Drinking Water From Copper Bottle : காப்பர் என்பது தமிழில் செம்பு என்பர். செம்பில் பலவகையான தண்ணீர் பாட்டில்களும் விற்கப்படுகின்றன. இதிலிருந்து தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
Benefits Of Drinking Water From Copper Bottle : தண்ணீர் குடிப்பது என்பது நம் உடலுக்கு அவசியமான ஒன்றாகும். உடலில் நீர்ச்சத்து இல்லை என்றாலே பல்வேறு வகையான நோய் பாதிப்புகளுக்கு நாம் ஆளாக வேண்டியதாக இருக்கும். ஒரு சிலர், தங்களின் ஆரோக்கிய நன்மைக்காக செம்பு பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிப்பர். இதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
செம்பு தண்ணீர் பாட்டிலில், 8 அல்லது அதற்கு அதிகமான மணி நேரம் வைத்திருக்க கூடாது. இருப்பினும், இதிலிருந்து தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. அவை என்னென்ன தெரியுமா?
தைராய்டு: தைராய்டு சுரப்பி : செம்பு தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு தேவையான காப்பர் சத்துகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இது, தைராய்டு சுரப்பியில் மாறுதல்களை ஏற்படுத்தலாம்.
நோய் தொற்றுகள்: உடலில் நோய் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் தொற்றுகளை தவிர்க்க காப்பர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாம் என சிலர் பரிந்துரைக்கின்றனர்.
உயர் ரத்த அழுத்தம்: ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தத்தை இது கட்டுப்படுத்தும் என கூறப்படுகிறது.
செரிமான கோளாறுகள்: தவறான உணவுகள் மற்றும் உடலுக்கு ஒத்துழைக்காத உணவுகளால் செரிமான கோளாறுகள் ஏற்படலாம். இதை தவிர்க்க, நாம் காப்பர் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிக்கலாம் என கூறப்படுகிறது.
இதய நோய் பாதிப்புகள்: இதய நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க, செம்பு பாட்டிலில் இருந்து தண்ணீர் அருந்தலாம் என சிலர் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும் இது குறித்த ஆராய்ச்சிகளில் எதுவும் இதை உண்மையாக்கும் வகையிலான முடிவுகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
கீல்வாதம்: கீல்வாத பிரச்சனைகளை தவிர்க்க, காப்பர் பாட்டிலில் தண்ணீர் அருந்தலாம். இந்த பாதிப்பினால் ஏற்படும் வலியை நீக்க இது உதவலாம்.
உடற்சோகையையும் செம்பு தண்ணீர் நீக்கும் என கூறப்படுகிறது. (பொறுப்பு துறப்பு: இந்த செய்தியானது பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியம் உள்ளிட்டவையின் அடிப்படையில் இங்கு தொகுத்து எழுதப்பட்டுள்ளது. இதனை பின்பற்றுவதற்கு முன் உங்களின் மருத்துவர நீங்கள் ஆலோசிக்க வேண்டும். இந்த தகவல்களை Zee News உறுதிப்படுத்தவில்லை)