ஆப்பிள் ஒரு பழம் மட்டுமல்ல, அது சத்தின் பொக்கிஷம். சத்தான உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை. ஆப்பிளின் நன்மைகளை முழுமையாக தெரிந்துக் கொள்வோமா?
ஆரோக்கியமான உடலே நிம்மதியான வாழ்வுக்கு அடிப்படை. எனவே நிம்மதியாக வாழ வேண்டுமென்றால், சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். ஆப்பிள் சத்தான பழம் என்பது தெரியும். ஆனால், அதில் இவ்வளவு நன்மைகளா? இத்தனை நாள் தெரியாமல் போச்சே என்று வருந்த வேண்டாம். இனிமேல் தினசரி ஆப்பிளை உணவில் சேர்த்து, ஆரோக்கியத்தையும், நிம்மதியான வாழ்வையும் கூடுதலாக பெறலாம்...
ஆப்பிளின் தோலில் ட்ரைடர்பெனாய்டுகள் கலவை இருக்கிறது. இந்த கலவை புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் பணியை செய்கிறது.
ஆப்பிள் சாப்பிடுவதால், நீண்ட நேரம் பசி கட்டுப்படுத்தப்படுகிறது. கூடுதல் நன்மையாக உடல் செரிமானத்திற்கு போதுமான கால அவகாசம் கிடைக்கும். இதே நடைமுறை தொடர்ந்தால், அதிகமான எடை குறையத் தொடங்குகிறது.
ஆப்பிளை தினசரி சாப்பிடுவதால் நமது செரிமான அமைப்பு மேம்படும். ஆப்பிளில் இருக்கும் பெக்டின், வயிறு தொடர்பான பிரச்சினைகளை நீக்குகிறது. குறிப்பாக மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும்போது ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
ஆரோக்கியத்தைக் கொடுக்கும் ஆப்பிள் எலும்புகளுக்கு மிகவும் நன்மை பயக்குமாம்!. உண்மையில், ஃபிளாவனாய்டு புளோரிசின் ஆப்பிளில் அதிகமாக காணப்படுகிறது, பெண்களுக்கு மிகவும் நன்மைக் கொடுக்கிறது. மாதவிடாய் காலத்தில் எலும்புகள் சேதமடையாமல் பாதுகாக்கிறது ஆப்பிள்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆப்பிள் அல்லது ஆப்பிள் பழச்சாறு அபரிமிதமான் நன்மைகள் கிடைக்கும். ஆஸ்துமா பிரச்சனை ஏற்படாமல் தடுக்க ஆப்பிள் பயனுள்ளதாக இருக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளில் உள்ள ஃபிளாவனாய்டுகள் நுரையீரலுக்கு வலு சேர்க்கின்றன.