தலைக்கு எண்ணெய் வைப்பவரா நீங்கள்? இந்த விஷயத்தில் கவனம் தேவை!

தலைக்கு எண்ணெய் வைப்பது முதல் ஷாம்பூ பயன்படுத்துவது வரை பல பொதுவான முடி பராமரிப்பு நடைமுறைகள் உள்ளன. இவற்றில் செய்யும் சிறு தவறுகளால் முடி கொட்டும் பிரச்சனை ஏற்படலாம்.

 

1 /6

நம்மில் பலரும் முடியை ஆரோக்கியமாக பராமரிக்க பல வழிகளை முயற்சி செய்கிறோம். இருப்பினும், பலருக்கும் முடி பராமரிப்பில் பிரச்சினைகள் உள்ளது. முடி பராமரிப்பில் உள்ள பொதுவான தவறுகளை தெரிந்து கொள்வது நல்லது.  

2 /6

முடிக்கு சூடான எண்ணெய்யை எப்போதும் பயன்படுத்த கூடாது. இவற்றை பயன்படுத்தினால் முடியில் பொடுகு, எரிச்சலை போன்றவை ஏற்படலாம். எனவே முடி சேதமடையாமல் இருக்க சூடான எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.   

3 /6

குளித்து விட்டு ஈரமான முடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது இல்லை. ஈரமான முடியில் கை வைத்தாலே, பலருக்கும் முடி உதிர்வு ஏற்படும். எனவே ஈரமான முடியில் எண்ணெய் வைப்பதை தவிர்ப்பது நல்லது.   

4 /6

தலைக்கு எண்ணெய் வைத்து இருந்தால், முடிக்கு கிளிப் அல்லது இறுக்கமாக கொண்டை போன்றவற்றை போட வேண்டாம். இதனால் முடி உதிர்வு அல்லது ஒரு சிலருக்கு தலைவலி ஏற்படும். முடிக்கு எண்ணெய் வைக்கும் போது முடிந்தவரை அப்படியே விடுவது நல்லது.  

5 /6

இரவு தூங்கும் போது முடிக்கு எண்ணெய் வைக்க வேண்டாம். இதன் காரணமாக முகப்பரு, கண்களில் எரிச்சல் போன்றவை ஏற்படலாம். எனவே ஷாம்பு போடுவதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பு தலைக்கு எண்ணெய் வைப்பது நல்லது.  

6 /6

முடிக்கு அதிகமாக எண்ணை தடவ கூடாது. அதிகமாக தடவும் போது அழுக்கு படிந்து, முடியை க்ரீஸ் போல மாற்றுகிறது. உச்சந்தலை மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு சிறிது அளவு எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. எனவே, முடிக்கு எண்ணெய் வைக்கும் போது கம்மியான அளவில் வைப்பதை நினைவில் கொள்ளவும்.