இன்றைய சூழலில் தலைமுடியை பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
நீங்கள் என்ன மாதிரியான கூந்தல் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தினாலும் ஒரு சிலருக்கு முடி கொட்டுவது மற்றும் வறண்டு போவது போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
தலையில் அதிக எண்ணெய் பசை கொண்ட நபர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்கின்றனர். இதனால் தலையில் உள்ள அழுக்கு நீங்கும் என்று நினைக்கின்றனர்.
தினசரி தலைக்கு குளிக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை. உங்கள் தலைமுடி அழுக்காகவும் அதிக எண்ணெய் பசையாகவும் இருக்கும் போது மட்டும் தலைக்கு குளித்தால் போதும்.
சூடான நீரில் முடியை கழுவ கூடாது. இதனால் முடியில் உள்ள இயற்கையான எண்ணெய்கள் வெளியற வாய்ப்புள்ளது. மேலும் முடி வறண்டும் போகும்.
முடிக்கு ஷாம்பு பயன்படுத்திய பிறகு கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். இது முடியை ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.
ஆண்கள் செய்யும் பொதுவான தவறு தலைக்கு குளித்த பிறகு, முடியை சரியாக பராமரிக்காதது தான். தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பை பயன்படுத்த கூடாது. முடி காய்ந்த பிறகு பயன்படுத்துவது நல்லது.