தூக்கம் உங்கள் கண்களை தழுவ... ‘இந்த‘ தவறுகளை செய்யாதீங்க...

Insomnia: நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கு, நல்ல ஆழ்ந்த தரமான தூக்கம் அவசியம். தூக்கமின்மை உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

சில சமயங்களில் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில தவறுகள், நமது தூக்கத்தை பெரிதும் பாதிக்கின்றன. இந்நிலையில், தூக்கத்தை பாதிக்கும் சில உணவுப் பழக்கங்கள் கொடுத்து மருத்துவர் கூறிய அறிவுரைகளை அறியலாம்.

 

1 /8

தூக்கமின்மை: நல்ல ஆழ்ந்த தூக்கம் என்பது, ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் ஒரு வரம். தூக்கமின்மை பலவித பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும். நமது உடலின் சக்தியை முழுவதுமாக உறிஞ்சி நம்மை சோர்வடையச் செய்யும் விஷயங்களில் தூக்கமின்மை முதலிடம் வகிக்கிறது எனலாம்.  

2 /8

தூக்கமின்மையினால் ஏற்படும் பாதிப்பு: தூக்கத்தின் முக்கியத்துவம் பற்றியும், தூக்கமின்மையினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், மருத்துவர்  டாக்டர். பயோஸ் பாண்டேயுடன் உரையாடிய போது, அவர் இது குறித்து முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

3 /8

மொபைல் மற்றும் லேப்டாப்: மின்னணு சாதனங்களில் இருந்து வெளியாகும் நீல ஒளி, உடலில் மெலடோனின் உற்பத்தியை பாதித்து தூக்கத்தை கெடுக்கிறது. எனவே, தூங்க செல்வதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவது, லேப்டாப்பை பயன்படுத்துவது தூக்கத்தை பாதிக்கும்.  தூங்கும் முன் குறைந்தது 30 நிமிடங்களுக்கு மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.  

4 /8

காஃபின் உணவுகள் அல்லது நிக்கோட்டின் இரவு படுக்கச் செல்லும் முன் காபி டீ அருந்துவதும், புகைபிடிப்பதும் தூக்கத்திற்கு எதிரி. காபி நம் உடலை விழிப்புடன் வைத்திருந்து, தூங்கவிடாமல் செய்யும். அதேபோல் நிக்கோட்டினும் கெடுக்கும்.  

5 /8

இரவு உணவு: நாம் சாப்பிடும் இரவு உணவு, லைட்டான உணவு வகைகளாக இருக்க வேண்டும். பொறித்த உணவுகள் பலப்படுத்தப்பட்ட உணவுகள், செரிமான அமைப்பை பாதித்து, ஜீரண சக்தியை பாதிப்பதோடு, தூக்கத்தையும் கெடுக்கிறது.

6 /8

நேரம் கெட்ட நேரத்தில் தூங்குதல்: பகலில் நேரம் கெட்ட நேரத்தில் தூங்குவதும், தினமும் ஒவ்வொரு நேரத்தில் இரவில் படுக்கைக்கு செல்வதும் தூக்கத்தை பாதிக்கும். தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டால், தூக்கமின்மை பிரச்சனையை தவிர்க்கலாம்.

7 /8

அசோகர்யமான படுக்கை: தூங்குவதற்கு நாம் பயன்படுத்தும் படுக்கை மற்றும் தலையணை, நமது உடல் தோரணையை பாதிப்பதாகவோ, கழுத்து வலி அல்லது முதுகு வலியை ஏற்படுத்துவதாகவும் இருக்கக் கூடாது. நல்ல தரமான படுக்கைகளையும் தலையணையையும் பயன்படுத்துவது நல்லது.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.