Mahindra & Mahindra-வின் புதிய கார் XUV700 அறிமுகம் செய்யப்பட உள்ளது. நிறுவனம் அதன் 'ஸ்மார்ட்' அம்சங்களை ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படுத்தி வருகிறது. இந்த பரபரப்பைப் பார்த்தால், இந்த கார், ஜேம்ஸ் பாண்ட் 007 இன் தனித்துவமான கார் போல இருக்கும் என்று தெரிகிறது.
ஹாலிவுட் திரைப்படங்களில் கார்களின் எண்ட்ரி அதிரடியாக இருக்கும், காற்றில் கதவு திறக்கும், இருட்டிலும் கார் அதிவேகமாக இயங்கும். இதேபோல், இந்த காரும் அதிரடியாகவே காணப்படுகின்றது. மஹிந்திராவின் புதிய XUV700 இன் அம்சங்களும் தனித்துவமானவைதான். இந்த காரின் டீசர் மற்றும் அபார அம்சங்களை இந்த பதிவில் காணலாம்.
மஹிந்திரா & மஹிந்திரா எக்ஸ்யூவி 700 இன் புதிய வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. இதில் ஸ்மார்ட் டோர் ஹேண்டில் காண்பிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மோஷன் சென்சார் கொண்ட கைப்பிடி போல் தெரிகிறது. ஆனால், நிறுவனம் இது குறித்து எந்த முக்கிய விவரங்களையும் இதுவரை வெளியிடவில்லை. வீடியோவில் கார் மிக அருமையாக தெரிகிறது. When you're in the mood to burn up the roads, the #XUV700 will light your way.#HelloXUV700 #HelloAutoBoosterHeadlampshttps://t.co/a4cot1Y7q2 pic.twitter.com/osINDKO5nE — MahindraXUV700 (@MahindraXUV700) June 24, 2021
XUV700 ஒரு அற்புதமான அம்சத்துடன் வருகிறது - 'Personalised Safety Alerts' அதாவது 'தனிப்பயனாக்கப்பட்ட பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்'. இதன் கீழ், நீங்கள் எப்போதாவது மிக வேகமாக வாகனம் ஓட்டினால், இந்த அம்சம் உங்கள் அன்புக்குரியவர்களின் குரலில் உங்களை எச்சரிக்கும். அதாவது, நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலும், அது உங்களை குடும்பத்துடன் இருப்பது போலவே உங்களை உணர வைக்கும். The most standout things are often hidden in plain sight. Say hello to Smart Door Handles!#XUV700 #HelloSmartDoorHandles pic.twitter.com/MdKP6Iili6 — MahindraXUV700 (@MahindraXUV700) July 10, 2021
மஹிந்திரா அறிமுகம் செய்யும் இந்த ஸ்மார்ட் கார் எஸ்யூவியில் 'ஆட்டோ பூஸ்டர் ஹெட் லேம்ப்ஸ்' என்ற அம்சமும் இருக்கும். உங்கள் XUV700 கார் 80 கிமீ வேகத்தை தாண்டியவுடன், இந்த அம்சம் சாலையில் கூடுதல் ஒளியைக் கொடுக்கும். இது தொலைதூரத்தில் பார்க்கவும் கூடுதல் பாதுகாப்பை வழங்கவும் உதவும். அதாவது இந்த கார் வேகத்துடன் பாதுகாப்பையும் தரும்.
பொதுவாக, சன்ரூஃப் அம்சத்தைக் கொண்ட இதுபோன்ற பல கார்கள் உள்ளன. எக்ஸ்யூவி 700 இன் இந்த அம்சத்தை மஹிந்திரா ஸ்கைரூஃப் என்று பெயரிட்டுள்ளது. இந்த பிரிவில் ஸ்கைரூஃப் மிகப்பெரிய சன்ரூஃப் ஆக இருக்கும் என்றும், வெளி உலக அனுபவத்தைப் பெற இது உதவும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
தற்போது, வாகனத் துறையில் 7 இருக்கைகள் கொண்ட புதிய காருக்கான தேவை உள்ளது. சமீபத்தில் ஹூண்டாய் தனது Alcazar-ஐ அறிமுகப்படுத்தியது, டாடா மோட்டார்ஸ் தனது சஃபாரியை 7 இருக்கைகளாக மாற்றி மீண்டும் அறிமுகப்படுத்தியது. முன்னதாக, எம்ஜி மோட்டரின் ஹெக்டர் பிளஸ் ஏற்கனவே ஒரு பெரிய போட்டியாளராக உள்ளது. இப்போது மஹிந்திரா & மஹிந்திரா XUV700-ஐ அறிமுகப்படுத்த உள்ளது.