Google Pay, Phonepe-ல் புதிய கட்டுப்பாடு! இதனை முறை மட்டுமே பணம் அனுப்ப முடியும்!

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய பயன்படும் யூபிஐ செயலிகளான போன்பே, கூகுள் பே போன்றவற்றிற்கு பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு விதிக்கப்படுமா என்று குழப்பம் எழுந்துள்ளது.

 

1 /4

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்சிபிஐ) ரிசர்வ் வங்கியிடம் டிசம்பர் 31ம் தேதி முதல் மற்ற செயலிகள் மூலம் செய்யப்படும் பரிவர்தனைகளுக்கு வரம்பு விதிக்கப்பட கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

2 /4

கூகுள் பே, போன்பே மற்றும் பேடியம் போன்ற செயலிகளுக்கு இன்றுவரை பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு என்று எதுவுமில்லை.  தற்போது வங்கி யூபிஐ செயலிகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு வரம்பு நிர்ணயிப்பது குறித்து எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.  

3 /4

யூபிஐ பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துவதற்கான காலக்கெடுவை என்பிசிஐ நீட்டிக்க வேண்டும் என்று சில நிறுவனங்கள் விரும்புகின்றனர், தற்போது இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  

4 /4

இந்த மாத இறுதிக்குள் மார்க்கெட் கேப் அமலாக்கம் தொடர்பான பிரச்சினை சரிசெய்யப்பட்டுவிடும் என்று சில தகவல்கள் தெரிவிக்கிறது.  நவம்பர் மாத இறுதிக்குள் யூபிஐ பரிவர்த்தனை வரம்பை கட்டுப்படுத்தப்படுமா என்பது குறித்து சில தெளிவான தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.