Senior Citizens Best Scheme Updates: 60 வயதிற்கு மேல் இருக்கக்கூடிய மூத்த குடிமக்களுக்கு மாதம் ₹20500 கிடைக்கக்கூடிய ஒரு திட்டம் சார்ந்து விவரங்களை பார்க்கலாம்.
Senior Citizens Best Scheme Updates: 60 வயதிற்கு மேல் இருக்கக்கூடிய மூத்த குடிமக்களுக்கு மாதம் ₹20500 கிடைக்கக்கூடிய ஒரு திட்டம் சார்ந்து விவரங்களை பார்க்கலாம்.
60 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களை கருத்தில் கொண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமானது உருவாக்கப்பட்டிருக்கிறது. மூத்த குடிமக்கள் தங்கள் வழக்கமான வருமானத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக அஞ்சல் துறை இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.
ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் மட்டுமில்லாமல், விஆர்எஸ் எடுத்தவர்கள் கூட இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். தற்போது இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு அரசு 82% வட்டியை செலுத்துகிறது. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ₹15 லட்சம் சேர்த்து முதலீடு செய்யும்போது ஒவ்வொரு மாதமும் ₹10250 வரும். அதிகபட்சமாக ₹30 லட்சம் முதலீடு செய்யும்போது ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் ₹2,46,000 வட்டி கிடைக்கும். இதன் மூலமாக மாதம்தோறும் ₹20,500 மற்றும் காலாண்டிற்கு ₹61,500 பெறலாம்.
குறைந்தபட்சமாக ₹1,000 முதலீட்டில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை துவங்கலாம். அதிகபட்சமாக ₹30 லட்சம் வரை முதலீடுத்தொகையை செலுத்தலாம். இதன் மூலமாக முதலீடு செய்யக்கூடிய தொகையைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் பணம் அல்லது வட்டி ஆகிய இவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
பிரிவு எண் 80c யின் படி இந்த முதலீட்டிற்கு வரிவிலக்கும் உண்டு. இந்திய அரசால் இத்திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் முதலீட்டு பணம் பாதுகாப்பாக இருக்கும். இத்திட்டத்தில் வருமானவரி சட்டத்தின் பிரிவு 80c யின் கீழ் ஆண்டுக்கு ₹15 லட்சம் வரை முதலீட்டாளர்கள் வரிவிலக்கை பெறலாம்.
ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டி கிடைக்கும். ஏப்ரல், ஜூன், அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஒவ்வொரு வருடமும் முதல் தேதியில் வங்கிக் கணக்கில் வட்டி சேர்க்கப்படும்.
போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் (அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் 2024) கணக்கை உங்களுடைய மனைவி அல்லது குடும்ப உறுப்பினருடன் கூட்டாக துவங்கலாம் இதன் மூலமாக அதிக பலனை பெறலாம். தபால் அலுவலக மாதாந்திர சேமிப்பு திட்டம் ஒரு வைப்புத் திட்டமாகும். இதில் மொத்த தொகையினை வருவாயாக வைக்கப்படும்போது மாதம்தோறும் வருமானம் கிடைக்கும்.
தனி நபர் ஒரே கணக்கில் ரூபாய் 9 லட்சம் வரையிலும் கூட்டுக்கணக்கில் ₹15 லட்சம் வரையிலும் இத்திட்டத்தின் வாயிலாக டெபாசிட் செய்யலாம். தபால் அலுவலக மாதந்திர சேமிப்பு திட்டத்தில் தற்போது 74% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. மனைவியுடன் சேர்த்து ₹15 லட்சம் டெபாசிட் செய்யும்போது ஒவ்வொரு மாதமும் 74% வட்டியில் ஒவ்வொரு மாதமும் ₹9250 வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.