இந்தியாவில் திடீர் என குறைந்த OnePlus 8 Pro ஸ்மார்ட்போனின் விலை - தற்போதைய விலை நிலவரம் என்ன!!
OnePlus 8 சீரிஸ் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது, அதே நேரத்தில் கடந்த அக்டோபரில் OnePlus 8T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்தியாவில் வரவிருக்கும் OnePlus 9 சீரிஸின் அறிமுகம் நெருங்கி வருவதால் முன்பிருக்கும் ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறைக்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 8T (8GB + 128 ஜிபி) போனை ரூ.39,999 என்கிற குறைந்த விலைக்கு வாங்கலாம், இதன் அசல் விலை ரூ.42,999 ஆகும். ஒன்பிளஸ் 8T போனின் 12 ஜிபி ரேம் மாறுபாடு ரூ.42,999 (அசல் விலை ரூ.45,999) விலையில் கிடைக்கும்.
மறுபுறம் ஒன்பிளஸ் 8 ப்ரோ (8 ஜிபி + 128 ஜிபி) ரூ.54,999 விலைக்கு பதிலாக வெறும் ரூ.50,999 விலையில் விற்பனைச் செய்யப்படும், ஒன்பிளஸ் 8 புரோ 12 ஜிபி வேரியண்டிற்கு ரூ.55,999 (அசல் விலை ரூ.59,999) செலவாகும்.
ஒன்பிளஸ் 8 போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.44,999 இலிருந்து ரூ.41,999 ஆகவும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.49,999 எனும் விலையிலிருந்து குறைந்து ரூ.44,999 விலையிலும் விற்பனைச் செய்யப்படும்.
ஒன்பிளஸ் 8 ப்ரோ, ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8T வாங்கும்போது வாடிக்கையாளர்கள் கூடுதலாக உடனடி தள்ளுபடிகளையும் பெறலாம். மார்ச் 10, 2021 வரை எஸ்பிஐ கிரெடிட் கார்டு சலுகை ஒன்ப்ளஸ் டிவி மாடல்களுக்கும் பொருந்தும். ஒன்பிளஸ் டிவி Q1 வாங்கும்போது, வாடிக்கையாளர்கள் ரூ.5,000 உடனடி தள்ளுபடியாக பெறலாம்.