சுக்கிரன் வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பண வரவு, பதவி உயர்வு.. முழு ராசிபலன் இதோ!!

Shukra Vakri, Impact on Zodiac Signs: ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜூலை 23 அன்று, சுக்கிரன் சிம்மத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். சுக்கிரன் இன்பம் மற்றும் ஆடம்பரத்தின் காரணியாகக் கருதப்படுகிறார். 

பொதுவாகவே அனைத்து கிரகங்களின் பெயர்ச்சிகளும் வக்ர பெயர்ச்சிகளும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். சுக்கிரன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் வெவ்வேறு ராசிக்காரர்களுக்கு வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். சுக்கிரனின் இந்த சஞ்சாரத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும்? யாருக்கு லாபம் உண்டாகும்? யார் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என இந்த பதிவில் காணலாம். 

1 /12

மேஷம்: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால், உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  ​​படிப்பில் உங்கள் அறிவுத்திறன் நன்றாக இருக்கும். மதப்பணிகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். எதிரிகள் உங்களிடமிருந்து விலகி இருப்பார்கள். மேலும் உங்கள் பணி வழக்கம் போல் தொடரும். 

2 /12

ரிஷபம்: சுக்கிரனின் சஞ்சாரத்தால் உங்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். நிலம், கட்டிடம், வாகனம் போன்றவற்றால் மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் நிதானமாக இருந்து சூது வாதுகளை சரியாக கண்டறிய வேண்டும். நண்பர்களை நிதானத்துடன் தேர்ந்தெடுங்கள். இந்த காலத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

3 /12

மிதுனம்: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியின் காரணமாக, சகோதர-சகோதரிகளின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து பெறுவீர்கள். இதற்கிடையில் புனித யாத்திரை சென்றால் சுக்கிரனின் சுப பலன்கள் கிடைக்கும். உங்கள் கையில் இருக்கும் மண் கூட தங்கமாக மாறிவிடும். இந்த காலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். 

4 /12

கடகம்: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் நீங்கள் இணக்கமாக இருப்பீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் நடத்தையை சரியாக பராமரிக்க வேண்டும். மேலும், சுக்கிரனின் அசுப பலன்களைத் தவிர்க்க நல்ல காரியங்களில் ஈடுபடவும்.

5 /12

சிம்மம்: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி காதலர்களுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும். நீங்கள் தொடர்ந்து நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். வசதி வயப்புகள் இந்த காலத்தில் அதிகமாகும். இந்த நேரத்தில், அதாவது ஆகஸ்ட் 7 வரை, நீங்கள் உங்கள் குடும்ப உறவுகளில் பலத்தை பராமரிக்க வேண்டும்.

6 /12

கன்னி: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி காரணமாக கன்னி ராசிக்காரர்கள் அனைத்து விதமான நன்மைகளையும் பெறுவார்கள். உத்தியோகத்தில் நல்ல பலன் கிடைக்கும். ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இது தவிர குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் சுப செலவுகள் அதிகரிக்கும்.  

7 /12

துலாம்: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் புதிய வேலையை ஆரம்பிக்கலாம். வியாபாரத்தில் பெரிய லாபம் ஏற்படும். அயல்நாட்டுத் தொடர்புகளால் அபரிமிதமான லாபம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சமூகத்தில் நற்பெயர் கூடும். பணியிடத்தில் மிகுந்த மரியாதையை பெறுவார்கள். திடீர் வருமானம் உயரும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்திலும் பெரிய லாபம் கிடைக்கும்.

8 /12

விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி நல்ல செய்திகளைத் தரும். அவர்கள் பணியிடத்தில் மிகுந்த மரியாதையை பெறுவார்கள். திடீர் வருமானம் உயரும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்திலும் பெரிய லாபம் கிடைக்கும். உங்கள் தொழிலில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். 

9 /12

தனுசு:  சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களின் பணத்தட்டுப்பாடு நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமையும். கல்வி அல்லது பொறியியல் துறையில் தொடர்புடையவர்கள், விரைவில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். ஆகஸ்ட் 7ம் தேதி வரை அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். உங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரம் தொடர்ந்து ஜொலிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். 

10 /12

மகரம்: குடும்பச் சூழலை சமாளிக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வீட்டின் பெரியவர்கள் மற்றும் உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பண விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம். 

11 /12

கும்பம்: சுக்கிரனின் சஞ்சாரத்தால் உங்கள் வாழ்க்கை துணையுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும். உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தில் ஏற்றம் இருக்கும். ஆகஸ்ட் 7 வரை, மற்றவர்களிடம் உங்கள் இயல்பு மென்மையாக இருக்கும். அனைத்து வகையிலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

12 /12

மீனம்: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அள்ளித் தரும். இந்த காலத்தில் உங்கள் நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதனுடன் உங்கள் பணியில் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். சுப பலன்களைப் பெற பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இந்த காலத்தில் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.