ஆரோக்கியத்திற்கு ஹாய் சொல்லும் குருமிளகு நோய்களுக்கு பை பை சொல்லும்

Good Health and Black Pepper: குருமிளகு உடலுக்கு நன்மைகளை செய்வதோடு, தீமைகளை விரட்டியடிக்கும்

ஆரோக்கியத்திற்கு அடிப்படையாகும் மிளகில் பல நன்மைகள் உள்ளன... அவற்றில் சில...

மேலும் படிக்க | ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள்

 

1 /5

கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல கடுமையான உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு மிகவும் அவசியம். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க விரும்புபவர்களுக்கு குருமிளகு ஒரு வரப்பிரசாதம்.

2 /5

தினமும் உங்கள் உணவில் சிறிது கருப்பு மிளகு உட்கொள்வது கொழுப்பை எரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. மேலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதாவும் உதவுகிறது.

3 /5

மிளகு மூளைக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால், மூளை சுறுசுறுப்பாக இருக்கும், மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் பண்பு குருமிளகுக்கு உண்டு

4 /5

நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனை இருந்தால், குருமிளகை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். சருமத்தில் ஈரத்தன்மையையும் இது பராமரிக்கும்

5 /5

குருமிளகை சூடான பாலில் கலந்து சாப்பிட்டால் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர அடிக்கடி சளி பிடித்தால் தினமும் மிளகு சாப்பிட்டு வந்தால் நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.   குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.