சனியின் அருளால் தீபாவளி முதல் 4 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்: உங்க ராசியும் இதுவா

Saturn Transit in October: வேத ஜோதிடத்தின்படி, சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். எனினும், இதற்கிடையில், சனி தனது இயக்கத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறார். இந்த ஆண்டு சனியின் நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏப்ரலில் ராசியை மாற்றிய சனி பகவான், பின்னர் ஜூலையில் வக்ரமானார், அதாவது வழக்கமான இயக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு மாறினார். தற்போது அக்டோபர் 23 ஆம் தேதி, தீபாவளிக்கு முந்தைய நாள், அவர் மீண்டும் தனது இயல்பு நிலைக்கு திரும்புவார். 

சனியின் நிலை மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனினும், இந்த முறை தீபத் திருநாளாம் தீபாவளியன்று சனி மாறுவது மிகவும் முக்கியமானது. மேலும், சனி தற்போது தனது சொந்த ராசியான மகர ராசியில் உள்ளார். தீபாவளி நேரத்தில் மாற்றம் காணும் சனி பகவானால் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிராகாசிக்கப் போகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

1 /4

சனியின் மாற்றம் மேஷ ராசியினரின் வாழ்க்கையில் நல்ல நாட்களைக் கொண்டுவரும். வாழ்வின் அனைத்து துறைகளிலும் அவர்கள் பலன் அடைவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவுடன், அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். சென்ற இடக்களில் எல்லாம் மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் முன்னேற்றமும் நன்மையும் கிடைக்கும்.

2 /4

துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் நிலை மாற்றம் சுப பலன்களைத் தருவது மட்டுமின்றி, அடுத்த இரண்டரை வருடங்கள் லாபத்தையும் அள்ளித் தரும். இதுவரை இருந்த பிரச்சனைகள் இப்போது தீரும். சச்சரவுகள் விலகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பண வரவு சாதகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

3 /4

சனி பகவான் வக்ர நிலையில் இருந்து நேரடி இயக்கத்துக்கு மாறுவது தனுசு ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாட்களை கொண்டு வரும். பண வரவு சாதகமாக இருக்கும். பழைய கடனில் இருந்து விடுபடுவீர்கள். தடைபட்ட வேலைகள் முடிவடையும். பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். காதல் திருமணத்தில் தடைகளை சந்தித்து வந்தவர்களுக்கு இப்போது தடைகள் விலகி அனைவரது சம்மதமும் கிடைக்கும்.   

4 /4

தீபாவளிக்கு முந்தைய நாள் சனியின் நிலையில் மாற்றம் ஏற்படுவது மீன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். பதற்றம் நீங்கும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இப்போது கிடைக்கும். வியாபாரத்திலும் லாபம் அதிகரிக்கும். வருமானமும் அதிகரிக்கும். உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு இப்போது கிடைக்கும்.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)