New Year: தங்கத்தின் விலை கற்பனை செய்யமுடியாத உச்சத்தைத் தொடும்…

புத்தாண்டில் தங்கத்தின் விலை மேலும் உயரும். கிராம் ஒன்றுக்கு 6300 ரூபாய் வரை உயரலாம்! காரணம் என்ன?

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த சமயத்தில் தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் நிச்சயமற்ற காலங்களில் தங்கம் புதிய உயரங்களை எட்டியதற்கு இதுவே காரணம். ஆயினும், அமெரிக்க டாலர் பலவீனமாவது மற்றும் புதிய சில நடவடிக்கைகளின் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2021 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 6300 ரூபாயை எட்டும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பொருளாதார மற்றும் சமூக நிச்சயமற்ற தன்மையால், தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக வெளிப்பட்டதன் நீட்சியே இது.

Also Read | Gold வாங்கினா, அரசு discount கிடைக்கும் தெரியுமா? தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு 

1 /8

ஆகஸ்டில் விலை அதிகமாக இருந்தது தங்கம் விலையுயர்ந்த உலோகம். இந்த மஞ்சள் உலோகத்தின் விலை ஆகஸ்ட் மாதத்தில் கிராம் ஒன்றுக்கு 5620 ஆகவும், சர்வதேச சந்தையில் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,075 டாலராகவும்  இருந்தது.  இன்று சென்னையில் தங்கத்தின் விலை 5162 ரூபாயாக இருக்கிறது.

2 /8

தங்கம் விலை அதிகரித்த காரணம் உலகளாவிய நாணயக் கொள்கைகளில் ஏற்பட்ட முக்கிய மாற்றம், 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் குறைந்த வட்டி விகிதங்கள் சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் பணப்புழக்கம் ஏற்பட உத்வேகமாக இருந்தது. இதனால் தங்கத்தின் விலை உயர்ந்தது. முதலீட்டாளர்களின் விருப்பத் தெரிவாக மாறியது.  

3 /8

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்க விலை 10 கிராமுக்கு ரூ .39,100 ஆகவும், அவுன்ஸ் ஒன்றுக்கு 1,517 அமெரிக்க டாலராகவும் இருந்தது என்று காம்ட்ரெண்ட்ஸ் இடர் மேலாண்மை சேவைகளின் தலைமை நிர்வாக அதிகாரி ஞானசங்கர் தியாகராஜன் தெரிவித்தார். தொற்றுநோய் ஏற்பட்டு உலகே கதிகலங்கிய சமயத்தில் தொடக்கத்தில் சற்று விலை மந்தமாகி பிறகு படிப்படியாக உயர்ந்து கிராம் ஒன்றுக்கு 5620 ரூபாயாக அதிகரித்தது.

4 /8

முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கும் தங்கம்   பணவீக்க அழுத்தங்களால் ஏற்படும் மாற்றங்களால், முதலீட்டாளர்களின் முக்கியத் தெரிவாக இருக்கிறது தங்கம். ரூபாயின் மதிப்பு நிலையானதாக இருந்தால், 2021 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை குறைந்தது கிராம் ஒன்றுக்கு 6000 ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 /8

MCX இல் தங்க விலை ஊகம் எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் மூத்த ஆய்வாளர் தபன் படேல் (HDFC Securities Senior Analyst (Commodities) Tapan Patel) தங்கத்தின் விலை ஊகம் பற்றி கூறுகிறார். உலகளாவிய பொருளாதார மீட்சி குறித்த கவலைகள் காரணமாக, தங்கத்தின் விலை அடுத்த ஆண்டு உறுதியாக இருக்கும், விலை அதிகரிக்குமே தவிர குறையாது. பொன்னின் விலை 57,000-63,000 வரை இருக்கும்.

6 /8

தங்கத்தின் விலை அடுத்த ஆண்டு உறுதியாக இருக்கும், விலை அதிகரிக்குமே தவிர குறையாது. பொன்னின் விலை 57,000-63,000 வரை இருக்கும்.

7 /8

கொரோனா தடுப்பூசி மற்றும் பொருளாதார மீட்சிக்குப் பிறகும் தங்கம் வலுவாக இருக்கும்  

8 /8

கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் பொருளாதார மீட்சி பற்றிய விவாதங்கள் இருந்தபோதிலும், தங்கத்தின் விலையில் அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சலுகைகளால் அமெரிக்க டாலர் பலவீனமடையக்கூடும் மற்றும் தங்கத்தின் விலைகள் மீண்டும் உயரக்கூடும்.