பாருக்கெல்லாம் அன்னை ஸ்ரீ மகாலட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதம் வரலட்சுமி விரதம். அன்னை உதித்த நன்னாளை, வரலட்சுமி விரத நாளாக அனுஷ்டித்தால் 16 வகை செல்வமும் நம்மைத் தேடி வரும்...
அன்னை உதித்த நன்னாளை, வரலட்சுமி விரத நாளாக அனுஷ்டிக்கிறோம். வருடந்தோறும், ஆடி மாதம் அமாவாசையில் இருந்து பௌர்ணமி தினத்துக்குள் வரக்கூடிய வெள்ளிக் கிழமை அன்று, ஸ்ரீவரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. பௌர்ணமி தினத்துக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையை, வரலட்சுமி பூஜைக்குரிய நாளாகக் கொள்ளவேண்டும்.
Also Read | Varalakshmi Viradha 2021: 16 வகை செல்வத்தையும் தரும் வரலட்சுமி நோன்பு; விரத நேரங்கள்
ஆகஸ்ட் 20, 2021ம் நாளன்று வரலட்சுமி விரதம். அன்னை லட்சுமியை இந்த நன்நாளில் நினைத்து, பூஜித்து விரதம் வைத்து வழிபட்டால், வாழ்வில் அனைத்து செல்வங்களும் வந்து குவியும்....
லட்சுமி என்றால் செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம், அழகு எனப் பல அர்த்தங்கள் உண்டு.
வரலட்சுமி விரதத்தன்று சிலர். கலசத்தில் அன்னையின் திருமுகத்தைத் தீட்டி, அதில் அன்னையை ஆவாஹனம் செய்து வழிபடுவார்கள்
பாற்கடலில் இருந்து தோன்றிய அன்னை மகாலட்சுமி
பௌர்ணமி தினத்துக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையன்று, வரலட்சுமி பூஜை அனுசரிக்கப்படுகிறது.