GOAT படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை! விஜய்யின் புதிய திட்டம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் The Greatest of All Time படத்திற்கு ஆடியோ லான்ச் நடைபெறாது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

 

1 /6

லியோ படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் கோட் (GOAT). இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார்.   

2 /6

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த GOAT படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.  

3 /6

GOAT படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மூன்றாவது பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. நேற்று புரமோ வெளியானது.  

4 /6

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி GOAT படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது. மற்ற படங்களைப் போல GOAT படத்திற்கு ஆடியோ லான்ச் நிகழ்ச்சி எதுவும் நடைபெறாது என்று கூறப்படுகிறது.   

5 /6

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் இந்த மாதம் கட்சியின் கொடியை அறிவிக்க உள்ளதால் GOAT படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.   

6 /6

GOAT படத்திற்கு பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ள விஜய், அதற்கு முன்பு ஒரு படத்தில் மட்டும் நடிக்க உள்ளார். அந்த படத்தை எச் வினோத் இயக்க உள்ளார்.