அச்சு அசல் தனுஷ் போலவே இருக்கும் டூப் நடிகர்! போட்டோவை பாருங்க..

Dhanush Dupe Actor Photo : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரைப்போலவே இருக்கிறார் இவரது டூப் நடிகர். தற்போது அந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது. 

Dhanush Dupe Actor Photo : கோலிவுட்டின் டாப் நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், தனுஷ். இவர் எழுதி, இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வருகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் தனுஷுற்கு வேறு ஒரு டூப் கலைஞர் டூப் போட்டிருக்கிறார். அவருடன் தனுஷ் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

1 /8

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர் ஹாலிவுட் வரை சென்று விட்டார். 

2 /8

தந்தை கஸ்தூரி ராஜா இயக்குநராக இருக்க, அண்ணன் செல்வராகவனும் அதே வழியில் சென்றார். இப்படி, சினிமா குடும்பத்தில் இருந்து வந்த தனுஷ், சிறு வயதில் இருந்தே சினிமா கணவுகளோடு இருந்து பின்னர் துள்ளுவதோ இளமை படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். 

3 /8

தனுஷின் அடுத்த படமான ‘தேவதையை கண்டேன்’ ப்ளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த படத்தை அவரது அண்ணன் செல்வ ராகவனே இயக்கி இருந்தார். தற்போது 20 வருடங்கள் கழித்து தன் அண்ணனை வைத்து தனுஷ் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அதுதான் ராயன். 

4 /8

நடிகராக மட்டும் வலம் வந்த தனுஷ், பா.பாண்டி படம் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இதையடுத்து ராயன் படத்தை எழுதி,இயக்கி நடித்தும் இருந்தார். 

5 /8

ராயன் படத்தில் தனுஷுடன் சேர்ந்து காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அபர்ணா பாலமுரளியின் கதாப்பாத்திரம் இப்படத்தில் தனியாக பேசப்பட்டது. 

6 /8

ராயன் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருந்தது. இதில் தனுஷிற்கு ஒரு நடிகர் டூப் போட்டிருந்தார். 

7 /8

அந்த நடிகர் பார்ப்பதற்கு அப்படியே தனுஷ் போலவே இருக்கிறார். இதையடுத்து ரசிகர்கள் அவரது போட்டோக்களை வைரலாக்கி வருகின்றனர். 

8 /8

இவர்தான் அந்த நடிகர். தற்போது இந்த போட்டோ, தனுஷ் ரசிகர்கள் இடையே பகிரப்பட்டு வருகிறது.