மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் விமான போக்குவரத்து நிறுவனம் கோ பர்ஸ்ட் விமான நிறுவனம்.
கோ பர்ஸ்ட் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் 5வது மிகப் பெரிய ஏர்லைன்ஸ் என பெயர் பெற்றது.
கடந்த சில காலங்களாக கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
அமெரிக்காவின் Pratt & Whitney விமான நிறுவனம், என்ஜின்கள் டெலிவிரி செய்யாததால், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என கோ பர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
விமானங்கள் இயங்காததால் ஏறத்தாழ 10,800 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு, மே 30ம் தேதி வரை அனைத்து விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.