Gandhi Jayanthi Tribute 2022: மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக பிறந்து மகாத்மாவாக உயர்ந்த தேசப் பிதா அண்ணல் காந்தியின் 153வது பிறந்தநாள் இன்று. சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை மூலம் தனது அனைத்து நோக்கங்களையும் நிறைவேற்றிய மகானின் பிறந்த நாள் அக்டோபர் 2.
நாட்டின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உட்பட பல தலைவர்களும், அமைச்சர்களும், மக்களும் அண்ணலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்...
மேலும் படிக்க | அண்ணல் காந்தியின் 154வது பிறந்தநாள் அனுசரிப்பு! ராட்டை தினத்தன்று இந்தியாவின் அஞ்சலி
அகிம்சையே அனைத்தும் என்று உலகிற்கு உரத்துச் சொன்ன தேசத்தந்தையின் 154வது பிறந்தநாள்
காந்தி ஜெயந்தி அன்று, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு, மகாத்மா காந்தியின் தகனம் செய்யப்பட்ட இடத்தில் உள்ள கருப்பு பளிங்கு மேடையில் எரியும் அணையா தீபத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். (பட உதவி: narendramodi) (புகைப்படம்: ட்விட்டர்)
காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, அக்டோபர் 2, 2022 அன்று புது தில்லி ராஜ்காட்டில் அஞ்சலி செலுத்தினார். (புகைப்படம்:PTI)
காந்தியின் பிறந்தநாளையொட்டி இன்று காலை ராஜ்காட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அஞ்சலி செலுத்தினார்.
உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகி, லக்னோவில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். ராட்டை சுற்றி நூல் நூற்றார்
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, அண்ணலுக்கு அஞ்சலி செலுத்தினார்
பீகாரின் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். (புகைப்படம்:PTI)
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் உள்ள காந்தி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். (புகைப்படம்:PTI)